வாய்ப்பே இல்லை..9600mah பேட்டரி.. 24GB ரேம்.. 2TB மெமரி.. 108MP தெர்மல் இமேஜிங் கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?
இப்படி ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. 6.58' இன்ச் FHD+ டிஸ்பிளே, 2TB ஸ்டோரேஜ், வெப்பத்தை அப்படியே கேப்ச்சர் செய்யும் தெர்மல் கேமரா (thermal camera), 108MP கேமரா, 24GB ரேம்.. 5G அம்சம், 9600mAh பேட்டரியெல்லாம் இதில் இருக்கிறது.
முதல் 3 வரியை படித்தவுடனே, இது என்ன போன்ப்பா? இப்படி பலதரப்பட்ட அம்சங்களை பேக் செய்துள்ளது? என்று நீங்கள் மனதிற்குள் நினைப்பது எங்களுக்கு இங்கே கேட்கிறது. இப்போது வரை நீங்கள் படித்தது வெறும் டீசர் தகவல் தான். இந்த போன் (phone) பற்றிய முழு பிக்ச்சரும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாருங்கள் இந்த போன் மாடல் பற்றிய முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

நாம் இங்கு வியப்புடன் பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் யூலிஃபோன் பவர் ஆர்மர் 18T அல்ட்ரா (Ulefone Power Armor 18T Ultra) என்ற பெயருடன் வருகிறது. இந்த சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான யூலிஃபோன் பவர் ஆர்மர் 18T (Ulefone Power Armor 18T) மாடலின் வாரிசாகவும், மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூலிஃபோன் பவர் ஆர்மர் 18T அல்ட்ரா (Ulefone Power Armor 18T Ultra):
இது உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் கிரேட் பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Ulefone Power Armor 18T Ultra மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட் மாடலான மீடியாடெக் டைமென்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் உடன் அதிக AnTuTu மதிப்பெண்களை பெற்றுள்ளது. இது பலதரப்பட்ட மல்டிடாஸ்கிங்கை எளிமையாக கையாளும் திறன் கொண்டது. இது 5ஜி (5G) நெட்வொர்க்கை ஆதரிக்கும் திறன் கொண்டது.
சமீபத்திய யூடியூப் (YouTube) சேனல் பவர் ஆர்மர் 18T அல்ட்ரா மாடலின் ஆண்டுடு மதிப்பெண் விபரங்களை பகிர்ந்துள்ளது. இது 580,285 என்ற மொத்த பெஞ்ச்மார்க் செயல்திறன் மதிப்பெண்ணைப் பெற்று, 18T இன் ஸ்கோரான 516,435 ஐத் தாண்டியுள்ளது என்று அதில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பவர் ஆர்மர் 18டி அல்ட்ரா வெர்ஷன், வெறித்தனமான பெர்பார்மென்ஸில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி அதன் மல்டிஃபங்க்ஸ்னல் கேமரா அமைப்பிலும் தனித்து நிற்கிறது.
லெப்டன் 3.5 தெர்மல் இமேஜிங் கேமரா (Lepton 3.5 Thermal Imaging Camera):
இதில் லெப்டன் 3.5 தெர்மல் இமேஜிங் கேமரா, 108MP மெயின் கேமரா, 32MP முன்பக்க கேமரா மற்றும் 5MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லெப்டன் 3.5 தெர்மல் இமேஜிங் கேமரா (Lepton 3.5 Thermal Imaging Camera), அதன் முன்னோடிகளை விட நான்கு மடங்கு வெப்ப தெளிவுத்திறனுடன், ஒளி இல்லாத சூழல்களிலும் கூட விரிவான புகைப்படங்களைப் படம் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2TB ஸ்டோரேஜ்.. 9600mah பேட்டரி..
இந்த சாதனம் 6.58' இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது மிகவும் உறுதியான ரஃக்டு பாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 9600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது. இது 3 முதல் 4 நாள் வரை நீடிக்கும். இந்த சாதனம் 24GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. 2TB வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இல் இயங்குகிறது. இது நவீன மற்றும் பாதுகாப்பான பயனர் அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ.24,999 மட்டுமே.


Click it and Unblock the Notifications








