விஜயகாந்த் பட பாணியில் சம்பவம்: உக்ரைனில் ராணுவ வீரர் உயிரை காப்பாற்றிய iPhone!

|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்

ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம்முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ராணுவ வீரரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது என்றால் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருக்கிறதா?. இந்த நிகழ்வை விரிவாக பார்க்கலாம்.

திரைப்பட பாணியில் நடைபெற்ற சம்பவம்

திரைப்பட பாணியில் நடைபெற்ற சம்பவம்

நடிகர் விஜயகாந்த் நடித்த தர்மபுரி திரைப்படத்தின் காட்சி ஒன்றில், ரவுடி ஒருவன் துப்பாக்கியால் கதாநாயகன் விஜயகாந்தை நோக்கி சுடுவான். அந்த துப்பாக்கியின் புல்லட் நேரடியாக விஜயகாந்தின் நெஞ்சில் பட்டவுடன் அதேவேகத்தில் திரும்பி அந்த ரவுடியின் மீதே பாயும். இதன்பின் விஜயகாந்த் தன் சட்டைக்குள் இருந்து ஒரு பித்தளை பிளேட்டை எடுத்துக் காட்டுவார். அந்த பிளேட்டில் பட்டுதான் புல்லட் திரும்பச் செல்லும். இதுபோன்ற காட்சிதான் உண்மையில் அரங்கேறி இருக்கிறது.

சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ

உக்ரைனில் ஒரு ராணுவ வீரரின் உயிரை ஐபோன் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த வீடியோ டுவிட்டர் மற்றும் ரெடிட் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் புல்லட் ஐபோனில் சிக்கி இருப்பதை தெளிவாக காண்பிக்கிறது. ஐபோன் ராணுவ வீரரின் உயிரை எப்படி காப்பாற்றியது, என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

போருக்கு மத்தியில் வைரல் வீடியோ

போருக்கு மத்தியில் வைரல் வீடியோ

ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்து வரும் இந்த சூழலுக்கு மத்தியில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பல பயனர்கள் பதிலளித்து வருகின்றனர். அதில் ஒருவர், "ஸ்மார்ட்போனில் ஸ்க்ரீன் ப்ரொடக்டர் கார்ட் பயன்படுத்தாமல் இருப்பது எவ்வளவு தவறு என்பது காட்டுகிறது" என நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

உயிரை காப்பாற்றிய ஐபோன் மாடல் என்ன?

உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் தனது ஐபோன் 11 ப்ரோ மூலம் தன் மீது ஏவப்பட்ட புல்லட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். ரெடிட் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் தனது பையில் இருந்து ஐபோன் 11 ப்ரோ மாடல் வெளியே எடுப்பதை காட்டுகிறது. சேதமடைந்த ஐபோன் ஆனது வீடியோவில் துல்லியமாக காட்டப்படுகிறது.

ராணுவ வீரரின் உயிருக்கே ஆபத்து?

ராணுவ வீரரின் உயிருக்கே ஆபத்து?

உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. அந்த புல்லட் அவர் பையில் வைத்திருந்த ஐபோனில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், ஐபோனில் புல்லட் சிக்கி இருப்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மாடல் ஐபோன் 11 ப்ரோ ஆகும். புல்லட் ஊடுருவ முடியாத வகையில் ஐபோன் 11 ப்ரோ இருக்கிறது என்பது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஐபோன் அவர் பையில் இல்லாமல் இருந்தால் அந்த ராணுவ வீரரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

நெட்டிசன்கள் கேள்வி?

நெட்டிசன்கள் கேள்வி?

இந்த வீடியோ முதலாக ரெடிட் தளத்தில் பகிரப்பட்டது. இதற்கு 3000 மேற்பட்ட லைக்குகள் கிடைத்து வருகிறது. பலரும் பலவிதமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "ஸ்மார்ட்போன்களை கொண்டு ஏன் புல்லட் துளைக்காத ஆடையை உருவாக்கக் கூடாது?" என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி இருக்கிறார். எது எப்படியோ புல்லட்டில் இருந்து தப்பித்த ராணுவ வீரர் நலமாக இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ஆப்பிள் ஐபோனுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். இதற்கு வலுசேர்க்கும் விதமாக இதுபோன்ற சம்வங்கள் அரங்கேறி வருகிறது. ஆப்பிள் சாதனங்களால் உயிர் பிழைத்தோர் என்ற தகவல் இது முதல்முறையல்ல. முன்னதாக ஏணைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது.

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்

வரக்கூடிய அழைப்புகளை எடுத்து பேசுவது, துண்டிப்பது, சாலைகளில் பயணிக்கும் போது மேப் செக் செய்வது, கையில் இருக்கும் போது இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, நடை பயண தூரம், உடற்பயிற்சி நிலை, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கண்காணிப்புகளை ஸ்மாரட் வாட்ச் மூலம் மேற்கொள்ளலாம். இதன் ஒருபகுதியாக ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஒரு நபரின் உயிரையே காப்பாற்றி இருக்கிறது.

பைக்கில் பயணித்த போது மயங்கி விழுந்த நபர்

பைக்கில் பயணித்த போது மயங்கி விழுந்த நபர்

அமெரிக்காவில் நபர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் பைக்கில் மயங்கி விழுந்ததை அறிந்த ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மயங்கி விழுந்ததுக்கும் ஆம்புலன்ஸ் வந்ததுக்கும் நடுவில் நடந்த விஷயமே சுவாரஸ்மானது ஆகும்.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள பிரத்யேக அம்சம்

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள பிரத்யேக அம்சம்

காரணம் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தப் போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பல்ஸ் குறைந்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் ஒரு தனித்துவ அம்சம் இருக்கிறது. ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை கட்டி இருப்பவர்களின் பல்ஸ் ரேட் குறையும் பட்சத்தில் தானாக அவசர எண்ணுக்கு அழைப்பு கொடுக்கப்படும். அதேபோல் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவருக்கு பல்ஸ் ரேட் குறைந்துள்ளது. அவர் ஆப்பிள் வாட்ச் கையில் அணிந்துள்ளார். பல்ஸ் ரேட் குறைந்ததையடுத்து அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

Pic&Video: Reddit.com

Best Mobiles in India

English summary
Ukraine Russia War- Iphone Saved the Life of ukraine Soldier

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X