உக்ரைன் ரஷ்யா போர்- வெறுப்பு பதிவுகளுக்கு அனுமதி: பேஸ்புக்.,சேவையை நிறுத்தும் சோனி.,யூடியூப் எடுத்த நடவடிக்கை!

|

உலகளவில் அதிக ரஷ்யா நிதியளிக்கும் ஊடக சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்திருக்கிறது. உலகளவில் அதிகபேர் பயன்படுத்தும் பிரதான சமூகவலைதளமாக இருப்பது யூடியூப். யூடியூப் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையின்படி, வன்முறைகளை மறுப்பதும் குறிப்பிட்ட மக்களை சிறுமைப்படுத்துவதும் தங்களின் கொள்கைக்கு எதிரானது என யூடியூப் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா தொடத்திருக்கும் போர் தொடர்பான காட்சிகளை அகற்றுவதாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லு தெரிவித்திருக்கிறார். அதேபோல் ரஷ்ய அரசின் நிதி உதவி மூலம் செயல்படும் ஊடகங்களை தடை செய்வதாக யூடியூப் அறிவித்திருக்கிறது.

வன்முறை மற்றும் வெறுப்பு பதிவுகளுக்கு அனுமதி என தகவல்

வன்முறை மற்றும் வெறுப்பு பதிவுகளுக்கு அனுமதி என தகவல்

அதேபோல் மறுபுறம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பு பதிவுகளை பதிவிட பேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பேஸ்புக் கொள்கைப்படி அந்நிறுவனம் எப்போதும் வன்முறை, வெறுப்பு பேச்சு தொடர்பான பதிவுகளை அனுமதிக்காது அதேபோல் கலவரத்தை தூண்டும் விதமான பதிவுகளை பதிவிட்டால் அந்த பதிவுகளை மொத்தமாக நீக்கவிடும்.

பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி

பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்துள்ள போரை கண்டிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவ அதிகாரிகள், ரஷ்ய ராணுவ வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான பதிவுகளுக்கு தற்காலிக அனுமதிகளை பேஸ்புக் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் பதிவுகளை தணிக்கை செய்யும் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோனி மியூசிக் எடுத்த நடவடிக்கை

சோனி மியூசிக் எடுத்த நடவடிக்கை

அதேபோல் ரஷ்யாவில் தங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டதாக சோனி மியூசிக் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கைப்படி, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கண்டிக்கும் விதமாக ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகும், போரில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் சோனி தெரிவித்துள்ளது.

அமேசான் எடுத்த நடவடிக்கை

அமேசான் எடுத்த நடவடிக்கை

அமேசான் டெலிவரி சேவைகள், அமேசான் பிரைம் ஓடிடி தள சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி நியூ வேர்ல்ட் எனும் அமேசானின் வீடியோ கேம் விற்பனையையும் நிறுத்துவதாக அறித்திருக்கிறது. உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருவதாகவும் அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவில் லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்துவதாக அறிவிப்பு

ரஷ்யாவில் லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்துவதாக அறிவிப்பு

டிக்டாக் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இன்க். ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை திரும்பப் பெறும் நிறுவனங்களில் இணைந்திருக்கின்றன. டிக்டாக் ரஷ்யாவில் லைவ் ஸ்ட்ரீமிங்கை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது போலி செய்தி பரப்புதல், உக்ரைன் மீதான படையெடுத்து குறித்த தகவல்களை குறைப்பது மற்றும் கட்டுப்படுத்தவதை நோக்கமாக கொண்டுள்ளது. சட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்களை மதிப்பாய்வு செய்யும் போது வீடியோ சேவையில் லைவ்ஸ்ட்ரீமிங் மற்றும் புதிய உள்ளடக்கத்தை இடைநிறுத்துவதைத் தவிர தங்களு வேறு வழியில்லை என நிறுவனம் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா போர்

உக்ரைனில் ரஷ்யா போர்

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவதோடு பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடக்கும் போர் தொடர்பாக ஏணைய வீடியோக்கள் வெளியாகி பரவுகின்றன. இதை குற்றம்சாட்டிய ரஷ்ய அரசு போலி செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

ஆப்பிள் போன்கள் விற்பனை தற்காலிமாக நிறுத்தம்

ஆப்பிள் போன்கள் விற்பனை தற்காலிமாக நிறுத்தம்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் போன்கள் விற்பனையை தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை தொடர்ந்து பல்வேறு பொது நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தி வருகிறது. மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுவத்துவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும், ரஷ்யாவினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Ukraine Russia war: Facebook Alowed Hate Post., Sony stops service., YouTube also took action

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X