7 நிமிடம் தான்- உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: ஒரே ஒரு ஐடியா- உட்கார்ந்த இடத்தில் இதை மட்டும் செய்தார்
இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரையில், எந்த நிறுவனத்தையும் எளிதாக தொடங்க முடியும் அதேபோல் பொதுவாக ஒரு வீட்டைக் காட்டிக் கூட நிறுவனத்தை தொடங்க முடியும் சூழல் இருக்கிறது. அதன்படி மாக்ஸ் என்பவர் போலியான நிறுவனத்தை உருவாக்கி பங்குச் சந்தையில் இடம்பெறவைத்து இந்த சித்து விளையாட்டை அரங்கேற்றி இருக்கிறார்.

மாக்ஸ் போஷ் என்பவர் யூடியூபர்
மாக்ஸ் போஷ் என்பவர் யூடியூபர் என கூறப்படுகிறது. இதுகுறித்து மாக்ஸ் என்பவர் கூறுகையில், இங்கிலாந்தில் எவர் வேண்டுமானாலும் எளிதாக நிறுவனம் தொடங்கலாம், அதன் அடிப்படையில் அன்லிமிடெட் மணி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். தனது நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களில் ஃபேரினோசியஸ் (farinaceous) என்பதை இணைத்தேன், அதற்கான பொருள் எனக்கு முழுமையாக தெரியாது. தொடர்ந்து சுமார் 10 பில்லியன் ஷேர்களுடன் தனது நிறுவனத்தை அறிமுகம் செய்தேன். இத்தனை பில்லியன் ஷேர்களை அறிமுகம் செய்வதன் மூலம் எனது நிறுவனத்தின் மொத்த ஷேர்கள் பங்கு 500 பில்லியன் பவுண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை எடுத்த நடவடிக்கை
இதை கண்டறிந்த பங்குச் சந்தை மாக்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டது. ஆனால் அவரது திட்டத்தின் படி பார்த்தால் மாக்ஸ்தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் எனவும் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிவிடப்படும் எனவும் கூறியுள்ளார். ஆனால் மாக்ஸ்-ன் மோசடி தந்திரத்தை பங்குச் சந்தை உணர்ந்து விட்டது, அதோடு மாக்ஸ் நிறுவனத்தின் ஷேர்கள் மதிப்பை கண்டு பங்குச் சந்தை அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து மாக்ஸ்-க்கு பங்கு சந்தை அதிகாரிகள் கடிதம் ஒன்றை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். அதில் தங்களின் பங்கு மதிப்புகளுக்கு போதிய நித ஆதாரம் இல்லை என்பது கண்டறியப்படுகிறது, இத்தனை பெரிய தொகையை நிர்ணயிக்க வாய்ப்பு இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை தரப்பில் இருந்து பெறப்பட்ட கடிதம்
தொடர்ந்து கூறிய மாக்ஸ், பங்குச் சந்தை தரப்பில் இருந்து பெறப்பட்ட கடிதத்தில், தான் நிதி மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகம் கொள்கிறோம், எனவே உடனடியாக பங்குகிளை மீண்டும் பெற்றும் கொள்ளும்படி கேட்டு கொள்கிளோம் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தை அளித்த எச்சரிக்கை அடுத்து மாக்ஸ் தனது நிறுவனத்தை மூடினார் என்றாலும் தகவல் அடிப்படையில் சுமார் 7 நிமிடம் உலகின் நம்பர் 1 பணக்காரராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையில் உச்சத்தை தொட்டவர்கள்
பங்குச் சந்தையில் உச்சத்தை தொட்டவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தாலும். தற்போது வரை பங்குச் சந்தை மூலம் தங்களின் வளர்ச்சிகளை உறுதி செய்ய முயற்சித்து வருபவர்கள் ஏராளம். ஆனால் பங்குச் சந்தையிலும் சில ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் குறுக்கு வழியில் முன்னேற நினைப்பது உண்டு. ஆனால் அது நிரந்தரமில்லை என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அரங்கேறி இருககிறது. நடிகர் வடிவேலு நடித்த திரைப்பட காட்சி ஒன்றில் ஒரே நாளில் பணக்காரராக மாறுவது எப்படி, என்ற நகைச்சுவை காமெடி இடம்பெற்றிருக்கும். அந்த நகைச்சுவை காட்சி இறுதியில் நடிகர் வடிவேலு மக்களிடம் தக்காளி முட்டை போன்ற பொருட்களால் அடிவாங்குவதே இறுதியாக இருக்கும். உழைக்காத எந்த விஷயமும் நிரந்தரமில்லை என்பதை அந்த காட்சி உணர்த்திருக்கும். அதேபோல் தான் இந்த செயலும் நடந்திருக்கிறது.
திரைப்பட காட்சி போல் முயற்சித்த நபர்
தொடர்ந்து ஹாலிவுட் படம் பார்ப்பவர்கள் இந்த காட்சி எதோ படத்தில் பார்த்தது போல் உள்ளது என்பதை உணர்ந்திருப்பார்கள். ஆம், தி வுல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் (The Wolf of the Wall Street) என்ற திரைப்படத்தில் கதாநாயகன் டீகாப்ரியோ இதே போன்ற சம்பவத்தை நிகழ்த்தி கோடீஸ்வரராக வளம் வரத் தொடங்குவார். ஆனால் அந்த திரைப்படத்திலும் இறுதிக் காட்சி, உழைக்காத பொருள் நிலைக்காது என்பதையே உணர்த்திருக்கும், இந்த திரைப்படும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதே காட்சியின் அடிப்படையாகக் கொண்டு தற்போது ஒருவர் உண்மையாக முயற்சித்திருக்கிறார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications