நேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..!
'நேதாஜி' என்றால் 'தலைவர்' என்று அர்த்தம். அப்படியாக இந்திய மக்களால் நேதாஜி என்று அழைக்கப்பட்டவர் தான் சுபாஷ் சந்திர போஸ். இந்திய உலக வரலாற்றின் வரலாற்றின் பக்கங்களை நிரப்பிய நேதாஜியின் மரணம் பற்றிய தெளிவு தான் இதுநாள் வரை நீடிக்கும் ஒரு மர்மமாகும்.
இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று வாழ்ந்து பின் 1970-களில் இறந்துவிட்டதாகவும், வட இந்தியாவில் ஒரு துறவியின் வடிவில் மறைமுகமாக வாழ்ந்து 1985-இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

குற்றம் :
சர்ச்சைக்குறிய நேதாஜி மரணம் பற்றிய குழப்பத்திற்கு மகாத்மா காந்தி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது போஸ்ஃபைல்ஸ் வலைதளம்.

அடித்தள காரணம் :
"நேதாஜி உயிரோடு இருக்கிறார், சரியான நேரத்தில் அவர் வருவார்" என்று காந்தி கொடுத்த ஆணித்தனமான கருத்து தான் இன்றுவரை நீடிக்கும் நேதாஜி மரணம் பற்றிய மர்மத்திற்கு அடித்தள காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பிரிட்டிஷை சேர்ந்த போஸ்ஃபைல்ஸ் வலைதளம்.

1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் :
விமான விபத்தில் நேதாஜி இறந்து போய் விட்டதாக தகவல் வெளியான 5 மாதங்கள் கழித்து அதாவது 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

உள்ளுணர்வு :
அதே ஆண்டு மார்ச் மாதம் தனது 'ஹரிஜான்' பதிப்பில் நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று தான் கூறியதற்கு தனது உள்ளுணர்வு தான் காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளார் என்பதையும் அந்த வலைதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

மறக்க வேண்டும் :
"நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று நான் கூறியதை அனைவரும் மறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உண்மை என்னவென்றால் நேதாஜி நம்மையெல்லாம் விட்டு சென்றுவிட்டார்" என்று காந்திஜி தனது 'ஹரிஜான்' பதிப்பில் தெளிவாக எழுதியுள்ளார்.

உயிர் தியாகம் :
மேலும் ஜனவரி 23-ஆம் தேதி 1947-ஆம் ஆண்டு நேதாஜியின் 50-வது பிறந்த தினத்தன்று "நாட்டிற்காக நேதாஜி செய்த உயிர் தியாகம் ஆனது மிகவும் அற்புதமானது" என்று காந்திஜி கூறியிருந்தார் என்றும் அந்த வலைதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேதாஜி மரணம் :
உறுதிப்பட தெரிந்து கொள்ளாமல் உள்ளுணர்வு மூலம் மட்டுமே நேதாஜி மரணம் பற்றி காந்தி சொன்ன கருத்து தான் இன்றுவரை நேதாஜியன் மரணம் வரலாற்றில் உறுதி செய்யப்படாத ஒன்றாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது போஸ்ஃபைல்ஸ் வலைதளம்.

ஆவண ஆதாரங்கள் :
நேதாஜியின் கடைசி நாட்களில் நிகழ்த்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இயக்கங்கள் சார்ந்த ஆவண ஆதாரங்களை வெளியிடும் வலைதளம் தான் போஸ்ஃபைல்ஸ்.

போஸ்ஃபைல்ஸ் :
மேலும் போஸ்ஃபைல்ஸ் வலைதளம் ஆனது இன்றுவரை மர்மமாக நீடிக்கும் நேதாஜியின் மரணம் குறித்த தெளிவான வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வலுவான சான்று :
மறுபக்கம், 1945 ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் இறக்கவில்லை என்பதற்கான வலுவான சான்றாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications