அசுர வளர்ச்சியில் பைனானஸ்- செயல்பாடுக்கு தடை போட்ட நாடு!
பிரிட்டனின் நிதி கண்காணிப்புக் குழு நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கையாக பைனான்ஸ்-க்கு தடை செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சிகள் வளர்ந்து வரும் வர்த்தகத்தில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் ஒன்றாக பைனான்ஸ் இருக்கிறது. எஃப்சிஏ-வின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு ஒழுங்குப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றமாக பைனான்ஸ்
பைனான்ஸ் என்பது கேமன் தீவுகள் குடியேறிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமாகும். 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்வேறு கிரிப்டோகரன்ஸிககளை வர்த்தகம் செய்வதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. 2021 நிலவரப்படி வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றமாக பைனான்ஸ் இருக்கிறது.

கையகப்படுத்திய பைனான்ஸ்
2020 ஆம் ஆண்டில் கையகப்படுத்திய பைனான்ஸ் சந்தைகள் அதன் ஒழுங்குமுறை வழிமுறைகளை இன்னும் பயன்படுத்தவில்லை என எஃப்சிஏ நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இது பைனான்ஸ்.காம் இணையதளத்தில் வழங்கப்படும் சேவைகளை இது பாதிக்காது என பைனான்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நேரடியாக பிரிட்டனில் கடுப்படுத்தப்படவில்லை
கிரிப்டோகரன்ஸிகளின் வர்த்தகம் நேரடியாக பிரிட்டனில் கடுப்படுத்தப்படவில்லை என்றாலும் கிரிப்டோகரன்சி டெரிவேடிவ்களில் வர்த்தகம் போன்ற சேவைகளை வழங்க அங்கீகாரம் தேவைப்படுகிறது. இருப்பினும் பிரிட்டிஷ் குடிமக்கள் தற்போதும் அதிகார வரம்புகளில் பைனான்ஸின் சேவைகளை அணுக முடியும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் குறிப்பாக பிரிட்டனில் பைனான்ஸ் புகழ்பெற்ற செயல்பாடாகும்.

பாதுகாப்பை உறுதி செய்யும் பிளாக் செயின்கள்
கிரிப்டோகரன்ஸிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பிளாக் செயின்கள் ஒரு காலக்கட்டத்தில் பாதுகாப்பில் ஒப்பிடமுடியா அம்சமாக இருந்ததோடு பலரின் பாராட்டுக்கும் உள்ளானது. கிரிப்டோகரன்ஸிகள் அனைத்து சமயத்திலும் உயர்ந்து வருகிறது. இது காலம் செல்லசெல்ல மிகவும் பிரபலமடைந்து வருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் பொருளாதார கணப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்தேரியம் மற்றும் சமீபத்தில் பிரபலமடைந்து டாக்கி காயின் ஆகியவைகள் பட்டியலை அதிகரிக்கச் செய்கின்றன.

இணையம் சார்ந்த பண பரிவர்த்தனை
இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எதிராக இருப்பவை இந்த பரிவர்த்தனை. இந்தியாவில் பல இடங்களில் பிட்காயின் பெயர் எதிரொலிப்பது வழக்கம். காரணம் பிட்காயின் மதிப்பு குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

வங்கிகள் அறிவுறை
முன்னதாக பிட்காயின் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது என வங்கிகளுக்கும் அறிவுறுத்தியும் மக்களும் பிட்காயின் வணிகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் ரிசர்வ் பேங்க் கூறியிருந்தது. இதையடுத்து இந்தியாவில் பிட்காயின் குறித்து பெரிய விவாதம் ஏதும் இல்லாமல் இருந்தது.உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் இருக்கிறது. உலகளவில் பல வணிக வளாகங்கள் மற்றும் இடங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை விரும்பிய நாட்டில் பணமாக மாற்றலாம். பிட்காயின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பிளாக்செயின் முறையில் பாதுகாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications