Home
News

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்.. 45 நாட்களில் புதிய வசதி.. யாருக்கெல்லாம் ரூ.100 கட்டணம்!

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது பள்ளிகள் வழியாக, குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்கை அப்டேட் செய்யும் (Aadhaar Biometric Update via School) திட்டத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படிப்படியாக தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

7 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU - Mandatory biometric update) இன்னும் முடிக்கவில்லை என்று யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் (UIDAI CEO Bhuvnesh Kumar) கூறியுள்ளார். அறியாதோர்களுக்கு எம்பியு என்பது - ஒரு குழந்தை ஐந்து வயதை எட்டிய பிறகு அவசியமான ஒன்றாகும்.

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்.. 45 நாட்களில் புதிய வசதி!

பெற்றோர் ஒப்புதலுடன் (Parental consent) பள்ளிகள் மூலம் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க தொடங்கும் திட்டத்தில் யுஐடிஏஐ செயல்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் சோதித்து வருகிறோம், இது இன்னும் 45 முதல் 60 நாட்களில் தயாராக இருக்கும் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார்.

ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் தரவின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை (Accuracy and reliability) பராமரிக்க கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 7 வயதிற்குள் இது முடிக்கப்படாவிட்டால், தற்போதைய ஆதார் விதிமுறைகளின் கீழ் அந்த குழந்தையின் ஆதார் எண் (Aadhaar Number) செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

மேலும் ஐந்து முதல் ஏழு வயது வரை பயோமெட்ரிக் அப்டேட் சேவை இலவசமாகவே கிடைக்கும். ஆனால் குழந்தை ஏழு வயதை எட்டியவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது . எனவே ரூ.100 என்கிற ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் கட்டணத்தை (Rs.100 Aadhaar Biometric Update Charge) தவிர்க்க உங்கள் குழந்தை 7 வயதை கடக்கும் முன்பே இதை செய்ய வேண்டும்

புதுப்பிக்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் (Updated Aadhaar Biometric) விவரங்கள் ஆனது - பள்ளி சேர்க்கை (School admissions), நுழைவுத் தேர்வு பதிவுகள் (Entrance exam registrations), உதவித்தொகைகள் (Scholarships) மற்றும் நேரடிப் பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer - DBT) திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை அணுக உதவும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

7 வயதிற்கு பின்னர் அடுத்தது எப்போது ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்? ஒரு குழந்தை 15 வயதை எட்டிய பிறகு தேவைப்படும் இரண்டாவது எம்பியு-விற்கான பள்ளி அடிப்படையிலான பயோமெட்ரிக் புதுப்பிப்பு மாதிரியை விரிவுபடுத்த யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளதாகவும் புவனேஷ் குமார் கூறியுள்ளார்.

தற்போது, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் (Aadhaar For New Born Baby), ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் பதிவு செய்யாமலேயே ஆதார் வழங்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பல அரசு திட்டங்களின் கீழ் சலுகைகளை வழங்குவதற்கு ஆதார் மிக முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகள் சரியான நேரத்தில் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பள்ளிகள் மூலம், குழந்தைகளை வசதியான மற்றும் திறமையான முறையில் சென்றடைய நாங்கள் இலக்கு வைத்துள்ளோம என்று புவனேஷ் குமார் கூறி உள்ளார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, யுஐடிஏஐ ஆனது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயோமெட்ரிக் இயந்திரங்களை (Biometric machines) கொண்டு செல்லும். பின்னர் அவை பரந்த அளவிலான கவரேஜை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் என்பதையும் புவனேஷ் குமார் கூறி உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UIDAI to Update Aadhaar Biometric of childrens through schools within 2 months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X