Home
News

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? இனி இந்த ஆவணம் வேண்டாம்.. எந்தெந்த ஆவணங்கள் செல்லும் தெரியுமா?

இந்தியாவில் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் (Aadhaar) கார்டு தற்போது தேவைப்படுகிறது. அதன்படி குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மேற்கொள்ள இனிமேல் பான் (PAN) கார்டு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. அதுவும் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொண்டால், அப்டேட் செய்யப்பட பல நாட்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? இனி இந்த ஆவணம் வேண்டாம்!

பொதுவாக ஆதார் அட்டையில் சில தவறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி, புகைப்படங்களை மாற்றுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஆதார் கார்டு திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளி கூடங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தற்போது இந்த ஆதார் சேவை மையங்களை அணுகி தான் திருத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள் பான் கார்டு முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது, ஏனெனில் மத்திய அரசு வழங்கும் பான் கார்டில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்றவை இருக்கும். இந்த நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் இருந்து பான் கார்டை நீக்கியுள்ளது ஆதார் ஆணையம். எனவே இனிமேல் பான் கார்டை கொண்டு பொதுமக்கள் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.

எந்தெந்த ஆவணங்கள் செல்லும் தெரியுமா?

இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்ட அறிக்கையில், பான் கார்டில் முகவரி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவணப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுவும் பான் கார் என்பது ஒரு வரிவிதிப்பு தொடர்பான ஆவணம் மட்டுமே, ஒரு நபரின் நபரின் அடையாளம் மற்றும் முகவரியை நிரூபிக்கும் ஆவணம் அல்ல. ஆகையால் தான் பான் கார்டை ஆவணப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம்.

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? இனி இந்த ஆவணம் வேண்டாம்!

மேலும் வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஆதார் கார்டு திருத்தத்தை மேற்கொள்ள சமர்பிக்கலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்ட ஒரு வாரத்தில் அப்டேட் ஆக வேண்டும். ஆனாலும் பலருக்கு கால தாமதமாக அப்டேட் ஆவதாகவும், சிலருக்கும் ஆதார் திருத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பெயர் திருத்தம் மேற்கொள்ள பான் கார்டு ஆவணமாகச் சமர்ப்பிக்க முடியாது என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
UIDAI stops receiving PAN card for Aadhaar name corrections
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X