ஆதார் மையத்திற்கு செல்லும் மக்கள் கவனத்திற்கு: இனி 'இந்த' அப்டேட்-க்கு எந்த ஆவணமும் தேவையில்லை.!

|

இந்தியா முழுவதும் அடையாளம் மற்றும் முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாக இருப்பாது ஆதார் அட்டையாகும். அதேபோல் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

 திருத்தங்கள் பயனர்களே

குறிப்பாக இதில் சில திருத்தங்கள் பயனர்களே ஆன்லைனில் செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ள நிலையில், சில திருத்தங்கள் ஆதார் மையத்திற்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

சமர்பிக்க வேண்டிய அவசியம்

அதன்படி ஆதார் மையத்திற்கு சென்றாலும், அல்லது வீட்டிலேயே ஆன்லைன் முறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தாலும் அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என என இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI)-தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளது.

ரியல்மி X7 சீரிஸ் எப்போது அறிமுகம் தெரியுமா? ரெடியா இருங்க, இதோ வந்துடுச்சு மிரட்டலான ஸ்மார்ட்போன்..ரியல்மி X7 சீரிஸ் எப்போது அறிமுகம் தெரியுமா? ரெடியா இருங்க, இதோ வந்துடுச்சு மிரட்டலான ஸ்மார்ட்போன்..

 நன்மைகள் மற்றும் ஆன்

மேலும் ஆதாரின் நன்மைகள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப் பெற உங்கள் மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். பின்பு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்கலாம்.

டெலிகிராம் செயலியின் சைலன்ட் மெசேஜ் அம்சம்: அனுப்புவது எப்படி? இதனால் என்ன பயன்?டெலிகிராம் செயலியின் சைலன்ட் மெசேஜ் அம்சம்: அனுப்புவது எப்படி? இதனால் என்ன பயன்?

ட்விட்டர் பதிவில் வெளிவந்த தகவலின்படி, உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் உடனடியாக சேர்க்கலாம். அதன்படி உங்கள் ஆதார் அட்டையுடன் நீங்கள் ஒரு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அதேபோல் மொபைல் எண் கோரிக்கையைச் சேர்க்க / புதுப்பிக்க அருகிலுள்ள எந்த ஆதார் மையத்திற்கும் உங்கள் ஆதாரைஎடுத்துச் செல்லுங்கள்." என்று ட்விட்டரில் ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாநில அரசிக் சலுகைகளை

குறிப்பாக மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது. அதேபோல் தற்போது ஆதார் இருந்தால் தான் மனித அடிப்படை வாழ்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. அரசின் சலுகைகள் உள்ளிட்ட முக்கியமான விசயங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
UIDAI says no documents are required to update mobile number in Aadhaar: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X