Home
News

Aadhaar ரூல்ஸ்.. உங்க ஆதார் கார்டுல பெயர், மொபைல் நம்பர்.. உடனே இதை பண்ணாதீங்க.. இனிமே என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது முக்கிய விதிகளை கொடுத்துள்ளது. இந்த விதிகளின்படி ஆதார் கார்டில் பெயர் மாற்றிவர்கள் இனிமேல் மாற்ற முடியாமல்கூட போக வாய்ப்புள்ளது. அதேபோல மொபைல் நம்பர் மாற்றுவதிலும் விதிகள் இருக்கிறது. இதை தெரிந்துகொண்டு இனிமேல் ஆதார் கார்டில் எதையும் செய்து கொள்ளுங்கள். அப்படியென்ன விதிகள் இருக்கின்றன? இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓட்டர் ஐடி இல்லாதவர்களைகூட பார்க்க முடியும். ஆனால், ஆதார் கார்டு இல்லாவர்களை பார்க்க முடியாது. சொல்லப்போனால், இந்திய குடிமகனின் தவிர்க்க முடியாத அடையாள சான்றிதழாக ஆதார் கார்டு மாறிவிட்டது. இதனால், அந்த கார்டில் வரும் விதிகளுக்கு ஒட்டுமொத்த குடிமக்களும் உட்பட வேண்டி இருக்கிறது. இப்போது, பெயர் மாற்ற விதிகளை பின்பற்ற வேண்டி இருக்கிறது.

Aadhaar ரூல்ஸ்.. உங்க ஆதார் கார்டுல பெயர், மொபைல் நம்பர்.. என்ன செய்ய?

ஆதார் கார்டில் பெயர் மாற்றம், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற பலவற்றை ஆன்லைனில் செய்து கொள்ள முடிந்தது. ஆனால், அது இப்போது கிடையாது. ஆதார் சென்டர்களுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை கொடுத்த பிறகே எந்த விவரங்களையும் மாற்ற முடியமென்ற விதிகள் வந்துவிட்டன. இருப்பினும், எத்தனை முறை பெயரை மாற்ற அனுமதி கிடைக்கும்?

எத்தனை முறை மொபைல் நம்பர் மாற்ற முடியும் கிடைக்கும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். முதலில் பெயரை எத்தனை முறை மாற்ற முடியும். அதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி ஒருவர் வாழ்நாளில் 2 முறை மட்டுமே ஆதார் கார்டில் பெயர் மாற்ற முடியும்.

இதற்கு மேல் மாற்ற விண்ணப்பித்தால், நிராகரிக்கப்பட்டுவிடும். ஆகவே, பெயர் மாற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அவரப்பட்டு மாற்றக்கூடாது. ஆனால், திருமணத்துக்கு பிறகோ, விவாகரத்துக்கு பிறகோ மற்றும் தத்தெடுப்பின் போதோ பெயரை மாற்ற அனுமதி வழங்கப்படும். இருப்பினும், இதற்கும் உங்களது பிராந்திய ஆதார் அலுவலத்தின் சிறப்பு அனுமதியை பெற வேண்டி இருக்கும்.

ஆகவே, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் (Aadhaar Card Name Change) செய்யும் போது ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து மாற்றுவது நல்லது. பெயரில் எழுத்து சேர்ப்பது மற்றும் எழுத்து நீக்குவது போன்ற பல விண்ணப்பங்கள் ஆதார் அலுவகத்துக்கு வருகின்றன. இவர்கள் 2 முறைக்குள் சரியான மாற்றி கொள்வதே நல்லது. இப்போது மொபைல் நம்பர் மாற்றம் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆதார் கார்டில் மொபைல் நம்பர மாற்றம் (Aadhaar Card Mobile Change) செய்ய விரும்பினால், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற கொள்ளலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி மொபைல் நம்பர் மாற்றுவதற்கு எந்தவொரு வரம்பும் இல்லை. ஆகவே, மொபைல் நம்பர் தொலைந்துவிட்டாலோ அல்லது புது நம்பரை மாற்ற விரும்பினாலோ எளிதாக செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? ஆதாரில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர மூலம் பேங்க், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை ஓடிபி வெரிபிகேஷன் செய்கின்றன. இதனால், ஆன்லைனில் மொபைல் நம்பரை மாற்ற முடியாது. நேரடியாக ஆதார் சென்டர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆன்லைனில் கிடைக்கும் படிவத்தை டவுன்லோட் செய்யலாம்.

அல்லது ஆதார் சென்டரிலும் பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து கொடுத்தால், உங்களது பயோமெட்ரிக் விவரங்கள் சரி பார்க்கப்படும். அதன் பிறகே உங்களது புது நம்பர் ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்படும். இந்த நம்பர் அப்டேட் செய்யப்பட்ட பிறகு குறைந்தபட்சம் மூன்று நாட்களில் அப்டேட் செய்யப்பட்டுவிடும். எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Do You Know UIDAI Rules For Aadhaar Card Name And Mobile Number Changing How Many Times Can Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X