Home
News

Aadhaar வைத்து இருக்கும் எல்லா மாணவர்களுக்கு இது கட்டாயம்.. ரிசல்ட் வந்த வேகத்தில் UIDAI புது அறிவிப்பு!

பிளஸ்2 ரிசல்ட் வெளியான வேகத்தில், யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்து இருக்கும் மாணவ, மாணவிகள் (Students) இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன அறிவிப்பு? ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், குறிப்பாக கல்வி, கல்வி உதவித்தொகை மற்றும் அரசு சேவைகளுக்காக ஆதார் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, கட்டாய பயோமெட்ரிக் அப்பேட்டை (Mandatory Biometric Update - MBU) செய்ய வேண்டும் என்று கூறியதோடு, யுஐடிஏஐ ஆனது எம்பியு-வின் நன்மைகளையும் எடுத்துரைத்துள்ளது.

Aadhaar வைத்து இருக்கும் எல்லா மாணவர்களுக்கு இது கட்டாயம்!

கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் என்றால் என்ன? கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் ஆனது பொதுவாக எம்பியு (MBU) என்று அழைக்கப்படுகிறது, இது ஆதார் பதிவுகளில் கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் செயல்முறை ஆகும். ஆதார் அங்கீகாரம் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, குழந்தைகள் குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட்ஸ் செய்வது கட்டாயமாகும்.

பயோமெட்ரிக் அப்டேட் ஏன் முக்கியம்? புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் விவரங்கள், பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்கான அடையாள சரிபார்ப்பை மேம்படுத்த உதவுகின்றன. யுஐடிஏஐ-யின் கூற்றுப்படி..விழிப்புணர்வு பிரச்சாரத்தின்படி.. எம்பியு ஆனது பின்வருவனவற்றிற்கு உதவக்கூடும்:

- கல்வி நிறுவனங்களில் சேருதல்
- போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்
- அரசு நலத்திட்டங்களை அணுகுதல்
- கல்வி உதவித்தொகைகளை பெறுதல்
- பயிற்சி மற்றும் ஆய்வு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பித்தல்

இதனால் மாணவர்கள் மற்றும் தேர்வர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்? நீட் (NEET), ஜீ (JEE), சியுஇடி (CUET) போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக்ஸ் மூலம் பயனடையலாம். ஏனெனில், இது பதிவுகள் மற்றும் தேர்வு நடைமுறைகளின் போது அடையாள சரிபார்ப்பை எளிதாக்க உதவுகிறது. காலாவதியான பயோமெட்ரிக் பதிவுகளால் ஏற்படும் அங்கீகார சிக்கல்களையும் இது குறைக்கக்கூடும்.

அரசுத் திட்டங்களுக்கான ஆதரவு: பல நலத்திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களுக்கு ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் தேவைப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் விவரங்கள் ஆனது பயனாளிகள் அரசு பலன்களை பெறும்போது சரிபார்ப்பு தோல்விகளை தவிர்க்க உதவுகிறது. கல்வி உதவித்தொகை, நிதியுதவி மற்றும் பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

யார் எல்லாம் பயோமெட்ரிக்ஸை அப்டேட் செய்ய வேண்டும்? சிறு வயதிலேயே ஆதார் அட்டைக்கு பதிவு செய்த குழந்தைகள், வளர வளர பயோமெட்ரிக்ஸ் அப்டேட்களை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில், வயதுக்கு ஏற்ப முகத்தோற்றமும், கைரேகைகளும் மாறுகின்றன. "இப்படிப்பட்ட"ஆதார் கார்டு ஹோல்டர்கள், அப்டேட் செயல்முறைக்காக அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு செல்லுமாறு யுஐடிஏஐ அறிவுறுத்துகிறது.

ஆதார் பயோமெட்ரிக்ஸை அப்டேட் செய்வது எப்படி? பயனர்கள் பயோமெட்ரிக் அப்டேட்டை நிறைவு செய்ய ஆதார் சேவா கேந்திரா (Aadhaar Seva Kendra) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்கு (authorised Aadhaar enrolment centre) செல்லலாம். இந்த செயல்முறையில் பொதுவாக பின்வருவன அடங்கும்:

- கைரேகை புதுப்பித்தல்
- கருவிழி ஸ்கேன் புதுப்பித்தல்
- புகைப்படம் புதுப்பித்தல்
- மக்கள்தொகை விவரங்களின் சரிபார்ப்பு
- விண்ணப்பதாரர்கள் மையத்திற்கு செல்லும் போது தங்களது ஆதார் அட்டை அல்லது ஆதார் எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரியான நேரத்தில் இந்த அப்டேட்களை செய்யுமாறு யுஐடிஏஐ வலியுறுத்துகிறது: கல்வி மற்றும் நலத்துறை முழுவதும் தடையற்ற அங்கீகாரம் மற்றும் சேவைகளை அணுகுவதற்காக, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து வைத்திருக்கமாறு யுஐடிஏஐ பரிந்துரைக்கிறது மற்றும் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அடிக்கடி நடத்தி வருகிறது.

Best Mobiles in India

English summary
UIDAI recommend Students To Update Their Biometric Details in Aadhaar Without Fail Why its Important
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X