பழைய கார்டு கதை முடிந்தது.. புது AADHAAR ஆப்.. ஃபேஸ் வெரிபிகேஷன்.. பெயர், மொபைல் நம்பரை இதுல மாற்ற முடியுமா?
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) கொண்ட இந்த ஆப் மூலமாக பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற முடியுமா?
ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்ய விரும்பினால், முகவரியை மட்டுமே ஆன்லைனில் மாற்ற முடிகிறது. மற்றபடி பிறந்த தேதி (Date Of Birth), மொபைல் நம்பர் (Mobile Number), பெயர் (Name) மற்றும் இமெயில் (Email) போன்றவற்றை ஆதார் சென்டர்களில் மட்டுமே மாற்றி கொள்ள முடிகிறது. ஏனென்றால், பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்த்த பிறகே அந்த அப்டேட்கள் செய்யப்படுகிறது.

இப்படிப்பட்ட நேரத்திலேயே நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய முடியும் என்றும் முகவரி மட்டுமல்லாமல், மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களையும் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard), டைம்ஸ் ஆப் இந்தியா (The Times of India) போன்றவற்றின் அறிக்கைகளில் கூறப்பட்டது.
ஆனால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் போர்ட்டலில் வழக்கம்போல முகவரியை மட்டுமே மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. ஆகவே, புதிய ஆதார் ஆப் வந்தவுடன் இந்த மொபைல் நம்பர், பிறந்த தேதி, பெயர் விவரங்களை மாற்ற அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், அதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் கிடைக்குமென்று யுஐடிஏஐ முன்பே உறுதி செய்திருந்தது.
இப்போது, புது ஆதார் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதை டிஜிட்டல் ஐடி (Digital ID) ஆக பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவருடைய ஆதார் எண்ணை மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்களுக்கும் ப்ரோஃபைல் உருவாக்கி கொள்ளலாம்.
இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் இருக்கிறது. இதன் மூலம் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது ஆதார் விவரங்களை ஃபேஸ் ஆதன்டிகேஷன் அல்லது கியூஆர் கோட் மூலமாக தேவைப்படும் நேரத்தில் ஷேர் செய்து கொள்ளலாம். இதில் மாக்ஸ்டு ஐடி (Masked ID) விருப்பம் இருக்கிறது. அதாவது, இந்த ஆப் மூலமாக ஆதார் விவரங்களை பகிரும்போது, 2 ஆப்ஷன் வரும்.
இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முழு ஆதார் விவரங்களை ஷேர் செய்ய வேண்டுமா அல்லது ஆதார் எண் மற்றும் பெயரை மட்டும் ஷேர் செய்ய வேண்டுமா என்று 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இதற்கு ஏற்ப மட்டுமே விவரங்கள் ஷேர் செய்யப்படும். பயோமெட்ரிக் வெரிபிகேஷன்களை (Biometric Verifications) லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம்.
அதேபோல ஆதார் கார்டு டவுன்லோட் மற்றும் பிவிசி ஆதார் டவுன்லோட் போன்ற வழக்கமாக விருப்பங்களும் இந்த புதிய ஆதார் ஆப் வாழியாக செய்து கொள்ளலாம். ஆகவே, பழைய ஆதார் கார்டுக்கு மாற்றாக அப்படியே டிஜிட்டல் வெர்ஷனாக இது வந்துள்ளது. ஆனால், மற்றபடி அதில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற அப்டேட்களை செய்ய அனுமதி கிடைக்கவில்லை.
ஆகவே, முகவரி தவிர மற்ற விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சென்டருக்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த புது ஆதார் ஆப் மூலமாக வரும் நாட்களில் அதுபோன்ற அப்டேட் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன், ஃபிங்கர்பிரிண்ட் போன்ற வெரிபிகேஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதை எப்படி பயன்படுத்துவது?
1.பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்து 12 டிஜிட் ஆதார் எண்ணை கொடுங்கள்.
2.ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அதை கொடுங்கள்.
3.பேஸ் ஆதன்டிகேஷன் இருக்கும். அதை செய்து முடியுங்கள். இப்போது 6 இலக்க ஃபாஸ்வேர்ட் செட் செய்யுங்கள். அவ்வளவு தான் மேற்கண்ட பீச்சர்களை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








