Home
News

உதய் என்கிற Aadhaar Mascot அறிமுகம்.. ஆதார் சேவைக்காக UIDAI செய்த இன்னொரு மாற்றம்!

ஆதார் சேவைகள் (Aadhaar Services) குறித்த பொதுமக்களின் புரிதலை எளிதாக்குவதற்காக, யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது உதய் (Udai) என்கிற ஆதார் மாஸ்காட்-ஐ (Aadhaar Mascot) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மைகவ் (MyGov) தளத்தில் - தேசிய வடிவமைப்பு மற்றும் பெயர் போட்டி மூலம் பெறப்பட்ட பல்வேறு உள்ளீடுகளிலிருந்து இந்த சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உதய் என பெயரிடப்பட்ட இந்த ஆதார் சின்னம், ஆதார் தொடர்பான தகவல்களை மேலும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும், மக்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதில் உதவியாக இருக்கும் என்று யுஐடிஏஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதய் என்கிற Aadhaar Mascot அறிமுகம்!

புதுப்பிப்புகள், அங்கீகாரம், ஆஃப்லைன் சரிபார்ப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை பகிர்தல், புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் பொறுப்பான பயன்பாடு உள்ளிட்ட ஆதார் சேவைகளில் தகவல்தொடர்புகளை இந்த சின்னம் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விழாவில் யுஐடிஏஐ தலைவர் ஆனா நீலகாந்த் மிஸ்ரா இந்த சின்னத்தை வெளியிட்டு வெற்றியாளர்களை பாராட்டினார்.

இந்த சின்னத்தின் வெளியீடு, ஆதார் தகவல்தொடர்பை எளிமையாகவும், உள்ளடக்கியதாகவும், இந்தியாவில் வசிக்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் மாற்ற யுஐடிஏஐ மேற்கொண்டுள்ள முயற்சிகளில் மற்றொரு படியாகும் என்று மிஸ்ரா கூறினார். இதற்காக யுஐடிஏஐ நாடு முழுவதிலுமிருந்து 875 உள்ளீடுகளை பெற்றது - மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த அருண் கோகுல், இந்த சின்ன வடிவமைப்பு போட்டியில் முதல் பரிசை பெற்றார். மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த இட்ரிஸ் தவைவாலா மற்றும் உத்தரபிரதேசத்தின் காசிபூரை சேர்ந்த கிருஷ்ணா சர்மா ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு வென்றவர்கள்.

மாஸ்காட் பெயர் போட்டியில் போபாலை சேர்ந்த ரியா ஜெயின் முதல் பரிசை வென்றார், அதை தொடர்ந்து புனேவை சேர்ந்த இட்ரிஸ் தவைவாலா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த மகாராஜ் சரண் செல்லப்பிள்ளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்ததாக யுஐடிஏஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது மைஆதார் (myAadhaar) போர்டல் அல்லது எம்ஆதார் (mAadhaar) மொபைல் ஆப் வழியாக பெறப்படும் ஆதார் பிவிசி கார்டு கட்டணங்களை (Aadhaar PVC Card Charge) அதிகரித்து உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

ஆதார் பிவிசி கார்டு என்றால் என்ன? ஆதார் பிவிசி கார்டு என்பது வழக்கமாக வழங்கப்படும் பேப்பர் அடிப்படையிலான ஆதார் கார்ட்டை வியா மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நீடித்த, கிரெடிட் கார்டு அளவிலான ஒரு பிளாஸ்டிக் ஆதார் பதிப்பாகும். இப்படிப்பட்ட ஆதார் பிவிசி கார்டுக்கான கட்டணம் முன்னதாக ரூ.50 ஆக இருந்தது; தற்போது இது ரூ.75 ஆக (வரிகளுடன் சேர்த்து) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பிவிசி கார்டு கட்டணம் ஏன் அதிகரித்தது? யுஐடிஏஐ சுற்றறிக்கையின்படி, பல ஆண்டுகளாக, ஆதார் பிவிசி கார்டு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான பொருட்கள், அச்சிடுதல், பாதுகாப்பான விநியோகம் மற்றும் தொடர்புடைய தளவாடங்களின் விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவினங்களை கருத்தில் கொண்டும், தொடர்ந்து உயர்தர சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஆணையம் தற்போதுள்ள கட்டண கட்டமைப்பை மதிப்பாய்வு செய்துள்ளது.

ஆதார் பிவிசி கார்டு அசல் ஆதாரிலிருந்து வேறுபட்டதா? இல்லை, ஆதார் பிவிசி கார்டு ஆனது உங்களுடைய அதே ஆதார் அட்டையின் ஒரு சிறிய மற்றும் நீடித்த பதிப்பு மட்டுமே ஆகும். இது இ-ஆதார் மற்றும் பேப்பர் அடிப்படையிலான ஆதார் ஆகியவற்றை போலவே செல்லுபடியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UIDAI launched Aadhaar Mascot Udai to simplify communication for public understanding of Aadhaar services
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X