ஆதார் அப்டேட்.. இறுதி நேரத்தில் வந்த சூடான அறிவிப்பு.. ஒவ்வொரு அப்டேட்டிற்கும் கணக்கு இருக்கு.. UIDAI அதிரடி..
ஆதார் அட்டை (Aadhaar card) தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து, சரியாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட இறுதிக்கட்ட காலக்கெடு வரும் ஜூன் 14, 2024 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த இறுதி காலக்கெடு நிறைவடைய இன்னும் 8 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் யுஐடிஏஐ (UIDAI) என்றழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அல்லது ஆதார் ஆணையம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை குறிப்பிட்ட எண்ணிக்கை முறையில் (Aadhaar card details change counting) மட்டுமே மாற்ற முடியும் என்றும், அதில் சில தகவல்களை ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றி அமைக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. எந்த தகவலை எத்தனை முறை மாறிக்கொள்ளலாம்? எந்த முக்கியமான ஆதார் தகவல்களை மாற்றி அமைக்க ஒரே ஒரு முறை மட்டும் அனுமதி வழங்கப்படும்?

ஆதாரின் அப்டேட்.. கணக்கு இருக்கு.. இறுதி நேரத்தில் வந்த சூடான அறிவிப்பு (Aadhaar Update):
ஒவ்வொரு தகவலுக்கும் எத்தனை முறை மாற்றம் செய்ய ஆதார் பயனர்களாகிய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள் (how many times an Aadhaar detail can be changed) என்ற முக்கியமான தகவலை தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு குடிமக்களும் (Aadhaar card users) இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரைக்கப்பட்டுள்ளது. சரி, எந்தெந்த தகவலை ஆதார் கார்டில் எத்தனை முறை மாற்றலாம் என்பதை பார்க்கலாம்.
ஆதார் பெயர் (Aadhaar card Name):
ஆதார் அட்டையில் உள்ள முக்கியமான அடையாள விபரம் உங்கள் பெயர் விபரம் தான். UIDAI இன் தகவல் படி, 1 ஆயுட்காலம் முழுக்க, உங்கள் பெயர் விபரங்களை நீங்கள் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள் என்று ஆதார் விதி கூறுகிறது.
ஆதார் பிறந்த தேதி (Aadhaar DOB):
அடுத்தபடியாக, ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பிறந்த தேதி விபரங்களை நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவீர்கள் என்று UIDAI தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உங்கள் ஆதார் அட்டை வழங்கிய பொழுது குறிப்பிடப்பட்ட பிறந்த தேதி மாதத்தில் இருந்து +3 மாதங்கள் அல்லது -3 மாதங்களுக்குள் மட்டுமே மாற்றம் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் பயனர் பாலினம்:
ஆதார் அட்டையில் உள்ள பாலின விபரங்களை நீங்கள் ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றி அமைக்க அனுமதிக்கப்படுவீர்கள். உங்கள் பாலினம் தவறுதலாக இருந்தால் ஒருமுறை மட்டும் மாற்றம் செய்ய அனுமதி உண்டு.
ஆதார் புகைப்படம் (Aadhaar Photo):
ஆதார் அட்டையில் உள்ள மிக முக்கியமான அடையாள தகவல் என்றால் அது உங்களுடைய புகைப்படம் தான். இதை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்து மாற்றிக்கொள்ள விரும்பினால் மாற்றம் செய்துக்கொள்ளலாம். காரணம், இதற்கு எந்தவித கட்டுப்படும் இல்லை என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் பயனரின் முகவரி மற்றும் மொபைல் எண் (Aadhaar user address details and mobile number):
ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்களை பலர் பலமுறை மாற்றுவார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதனால், UIDAI ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்களை மாற்றி அமைக்க எந்தவித குறிப்பிட்ட எண்ணிக்கையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் ஆதார் அட்டையில் இதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த எண்ணிக்கையை தாண்டி.. கூடுதல் எண்ணிக்கை மாற்றங்களுக்கு அனுமதி உண்டா?
ஒருவேளை, இந்த குறிப்பிட்ட எண்ணிக்கைகளை தாண்டிய சில ஆதார் அட்டை பயனர்களுக்கு, இப்போது ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதை மேற்கொள்ள UIDAI அனுமதிக்குமா? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழுந்திருக்கலாம். உண்மையை சொல்ல போனால், வரம்பை தாண்டிய பிறகு, உங்களால் ஆன்லைனில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், விதிவிலக்கு கையாளுதல் செயல்முறை எனப்படும் சிறப்பு செயல்முறையை பின்பற்றி மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதற்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








