Home
News

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க புதிய வசதி அறிமுகம்.! வாங்க பார்ப்போம்.!

இந்தியாவில் பல்வேறு தேவைகளுக்கும் பிரதான ஆவணமாக ஆதார் கார்ட் இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதேபோல் ஆதார் கார்டு இருந்தால் தான் தற்போது அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் தான் வங்கி,அரசு சேவைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும் சிலர் ஒன்றுக்கும் அதிகமான மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதால் இதில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே மக்களின் இந்த குழப்பத்தைத் தவிர்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தற்போது (யுஐடிஏஐ - uidai) ஒரு புதிய வசதியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க புதிய வசதி அறிமுகம்.!

அதாவது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தற்போது கொண்டுவந்துள்ள புதிய வசதியின் மூலம் ஆதாரில் ஏற்கனவே எந்த மொபைல் எண் அளித்துள்ளோம் என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக யுஐடிஏஐ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaarசெயலியில் மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்' என்ற என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பயனர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளைக் கூட அதில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை அல்லது தற்போது பயன்பாட்டில் இல்லை என்றால் mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில் பயனர்கள் ஏற்கெனவே கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தற்போது கொண்டுவந்துள்ள புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஒருவேளை மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் அல்லது புதிதாக இணைக்க விரும்பினால் மக்கள் தங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்துக்குச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

அதேபோல் முதன் முதலில் ஆதார் எடுக்க போகும் போது, அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. எனவே அவர்களின் போட்டோக்கள் அவர்களுக்கே அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும். எனவே பல்வேறு மக்களுக்கு தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்து பயன்படுத்தத் தோன்றும். குறிப்பாக இது எளிதான காரியம் தான். அதாவது ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்ற சில வழிமுறைகள் உள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் UIDAI (https://uidai.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து அந்த இணையதளப் பக்கத்தில் Aadhaar Update எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.

வழிமுறை-2: அடுத்து ஆதார் பதிவு மையத்தில் அந்த படிவத்தைச் சமர்ப்பிக்கவும். குறிப்பாக அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார். அதன்பிறகு உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் எடுத்துக்கொள்வார்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க புதிய வசதி அறிமுகம்.!

வழிமுறை-3: குறிப்பாக இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும்
புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார். பின்பு உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

வழிமுறை-4 : அதேபோல் உங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் கண்காணிக்கலாம். அதாவது UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
UIDAI has introduced new feature to verify mobile number and email: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X