Home
News

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. ஒரு வருடம் இலவசம்.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..

ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு வருடம் இலவசம்
அதாவது ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை myAadhaar இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை கடந்த 13ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..

குறிப்பாக பொதுமக்களிடையே இந்த சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஆதார் விவரங்களை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கும் திட்டத்தின் காலவரம்பை மத்திய அரசு 2027 ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. இதனால், ஆதார் அட்டைதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் 'myAadhaar' இணையதளத்தின் மூலம் தங்களின் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆனாலும் myAadhaar ஆன்லைன் போர்ட்டல் மூலம் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே இந்த இலவசச் சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆவணங்களை ஜூன் 14, 2027-க்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய ஆதார் செயலி

மேலும் இந்த அறிவிப்புடன் சேர்த்து, மொபைல் செயலிகளிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்த பழைய 'mAadhaar' செயலி விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இந்த செயலிக்குப் பதிலாக மிகவும் எளிமையான மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்ட Aadhaar செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதுவும் இந்த புதிய ஆதார் செயலியில் பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு மூலம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆதார் செயலி 3 மாதங்களுக்குள் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் மக்களிடம் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது மக்கள் ஆதார் செயலியைப் பயன்படுத்தி செல்போன் எண் மற்றும் முகவரி அப்டேட்கள் போன்ற பல்வேறு சேவைகளை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இதில் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அதுவும் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஆதார் செயலியைப் பயன்படுத்தி தங்களது செல்போன் எண்களைப் புதுப்பித்துள்ளனர்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..

6 லட்சம் மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி தங்களது முகவரியைப் புதுப்பித்துள்ளனர். அதுவும் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் ஐஒஎஸ் (Apple IOS ) ஆகிய இரண்டு இயங்குதளங்களில் செயலி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

புதிய ஆதார் செயலியின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், க்யூஆர் கோட் அடிப்படையிலான ஆதார் பகிர்வு (QR-based Aadhaar sharing), முக அங்கீகாரம் (Face authentication), பயோமெட்ரிக் லாக் கட்டுப்பாடுகள் (Biometric lock controls) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களைப் பகிர்தல் (Selective information sharing) போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
UIDAI Extends Free Aadhaar Update Deadline: Check the New Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X