ஆதார் கார்டு இருக்கா.. இறுதி நேரத்தில் வந்தது புதிய உத்தரவு.. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு.. இதோ முழு விவரம்!
இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளையும் பெற ஆதார் கார்டு பயன்படுகிறது. அதாவது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கு ஆதார் கார்டு தான் பயன்படுகிறது.
தற்போது ஆதார் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மாற்றங்களைச் செய்ய விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால் அடுத்த ஆண்டு ஜூன் 14 வரை எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாகச் செய்யலாம்.

குறிப்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான (அப்டேட் செய்வதற்கான) கடைசி தேதி முன்பு ஜூன் 14, 2025 என்று தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அப்டேட் கொடுக்கப்படுவதால் அனைத்து மக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அடுத்த ஆண்டு ஜூன் 14-க்கு பிறகு ஆதார் அப்டேட் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சிலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டையை வைத்திருப்பார்கள். இந்த பழைய ஆதார் கார்டினை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் அனைத்தும் தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் உங்கள் தகவல்களைப் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் ஆதார் அட்டைகளில் எந்தவிதமான பிழைகளும் இருக்கக்கூடாது. ஒருவேளை ஆதாரில் பிழைகள் இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சில சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெற முடியாது. எனவே ஆதாரில் பிழைகள் இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய விரும்பினால் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான My Aadhaar போர்ட்டலைப் பயன்படுத்தலாம். பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் MyAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆதாரில் பெயர், முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைப் பார்க்கலாம்.
ஸ்டெப்-1 : ஆதார் இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் மை (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப்-2 : அடுத்து ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். பின்பு உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.
ஸ்டெப்-3: இந்த சுயவிவரங்கள் தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெப்-4: இப்போது உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும்.
ஸ்டெப்-5: மேலும் உங்கள் அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்தல்வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். அடுத்து உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதை எளிமையாகக் கண்காணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications