மை ஆதார் போரட்டலில் இதை பதிவு செய்யுங்கள்.. பலருடைய ஆதார் எண்களை செயலிழக்க செய்த UIDAI அறிவிப்பு!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது நாடு முழுவதும் 1.4 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர்களின் ஆதார் எண்களை செயலிழக்க செய்துள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு நபர்களுடைய ஆதார் எண்கள் நீக்கப்பட்டது ஏன்? யார் அவர்கள்?
யுஐடிஏஐ ஆல் நீக்கப்பட்ட ஆதார் எண்கள் ஆனது இறந்துபோன நபர்களுக்கு சொந்தமான ஆதார் எண்கள் ஆகும். இந்திய அரசாங்கம் வழங்கும் நலத்திட்டங்களின் பலன்கள் சரியான பெறுநர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும், இறந்தவர்களின் அடையாளங்களை பயன்படுத்தி எந்த தவறான வேலைகளும் செய்யப்படாமல் இருப்பதற்கும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தூய்மைப்படுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார், நலத்திட்டங்களின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், அவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் இறந்த நபர்களின் ஆதார் எண்களை செயலிழக்க செய்வது அவசியம். இது ஆதார் தொடர்பான மோசடியில் பொது நிதி வீணடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.
தற்போது 3300 க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்களின் ஆதார் எண்களை செயலிழக்க வைக்கும் இந்த நாடு தழுவிய முயிற்சியின் ஒரு பகுதியாக, வருகிற டிசம்பர் 2025 க்குள் மேலும் பல இறந்தபோன நபர்களின் ஆதார் எண்களை செயலிழக்க வைக்க வேண்டும் என்கிற இலக்கையும் யுஐடிஏஐ நிர்ணயித்துள்ளது.
இந்த செயல்பாட்டில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை, இதன் விளைவாக தரவுகளில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன என்று யுஐடிஏஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இறப்பு பதிவுகளில் இருந்து ஆதார் எண்கள் காணாமல் போகின்றன அல்லது தவறாகவோ அல்லது முழுமையடையாமல் உள்ளிடப்படுகின்றன.
நிதி மற்றும் நிதி சாராத நிறுவனங்களில் ஆதார் குறித்த தரவுகள் சிதறிக்கிடக்கிறது, இதனால் சரிபார்ப்பு மற்றும் பொருத்துதல் மிகவும் கடினமாகிறது. இறந்த நபர்களின் பெயர்களில் அரசாங்க சலுகைகள் வழங்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன. இத்தகைய தவறான பயன்பாட்டை அகற்ற, யுஐடிஏஐ இந்த தூய்மைப்படுத்தும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது, மேலும் மைஆதார் (MyAadhaar) போர்ட்டலில் இறப்புகளை புகாரளிக்கும்படியும் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆதார் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை குழந்தைகளுக்கான ஆதார் அட்டை (Baal Aadhaar Card) வழங்குவதில் முக்கிய மாற்றம் ஒன்றும் கொண்டுவரப்பட உள்ளது. புதிய செயல்முறையின் கீழ் ஒரு குழந்தைக்கு பால் ஆதார் வழங்கப்பட்டவுடன், அவர்களின் பிறப்பு சான்றிதழ் ஏற்கனவே யுஐடிஏஐ அமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மீண்டும் பெரியவர்களாக பதிவு செய்ய முடியாது.
இதன் மூலம் இரண்டு ஆதார் முறை முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகே வேண்டாம். இந்த செயல்முறை ஆனது யாருமே இரண்டு முறை ஆதாருக்காக பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஒருவேளை சரியான பிறந்த தேதி கிடைக்காத சந்தர்ப்பங்களில், அல்லது தாய்-தந்தை இல்லாதவர்களுக்கு - அவர்களுடைய பிறந்த ஆண்டு பதிவு செய்யப்படும் என்பதையும் புவனேஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த செயல்முறை அடுத்த மூன்று மாதங்களில் முழுமையாக செயல்படும் என்றும், தானியங்கி இணைப்பும் (Automatic linkage) செயல்படுத்தப்படும் என்றும் புவனேஷ் குமார் கூறினார். இதற்கான 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் (RGI) தரவுகளுடன் அதன் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் யுஐடிஏஐ ஈடுபட்டுள்ளது. இவற்றில், 25 மாநிலங்கள் ஏற்கனவே சிவில் பதிவு முறையில் (CRS) உள்ளன, மீதமுள்ள 11 மாநிலங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








