இனி செல்லுபடி ஆகாது.. இடியை இறக்கிய UIDAI.. Aadhaar அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் அட்டை (Aadhaar Card) மற்றும் அதில் உள்ள ஒருவரின் பிறந்த தேதி (Date of Birth - DOB) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை ஆனது ஒரு அடையாள சான்றாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது பிறந்த தேதிக்கான ஒரு செல்லுபடியாகும் சான்றாக பயன்படாது என்றும், பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி குறித்து ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், தனிநபர்கள் தனி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு அவர்களையே சாரும் என்றும் இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் வழிஆயகி, யுஐடிஏஐ ஆனது, ஆதார் அட்டை ஆனது சரிபார்ப்பிற்காக பயன்படுத்தப்படும்போது ஒரு அடையாள சான்றாக பயன்படும் நோக்கம் கொண்டது. ஆனால் அது தானாகவே பிறந்த தேதிக்கான ஒரு சான்றாக கருதப்படாது என்று கூறி இருந்தது
இப்போது இதுகுறித்த ஒரு விரிவான தெளிவுபடுத்தும் ஆவணத்தில், ஆதார் சட்டம், 2016 "பிறந்த தேதிக்கான சான்றாக அதை ஏற்றுக்கொள்வது குறித்து மௌனம் காக்கிறது" என்று யுஐடிஏஐ குறிப்பிட்டுள்ளது. "எனவே, ஆதாரில் உள்ள பிறந்த தேதியின் சரியான தன்மை குறித்து சர்ச்சை ஏற்பட்டால், அதை நிரூபிக்கும் பொறுப்பு ஆதார் எண் வைத்திருப்பவரையே சாரும். இதையும் சில உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு," என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
மேலும் "ஒரு தனிநபரின் அடையாளத்தை சரிபார்ப்புக்கு உட்பட்டு உறுதிப்படுத்த ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்; இருப்பினும், அது தானாகவே பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்." என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
பிறந்த தேதியின் உண்மைத்தன்மை குறித்து சர்ச்சை ஏற்பட்டால் என்ன நடக்கும்? யுஐடிஏஐ-யின் இயக்குநர் ஆன சஞ்சீவ் யாதவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, "ஆதாரில் உள்ள பிறந்த தேதியின் உண்மைத்தன்மை குறித்து சர்ச்சை ஏற்பட்டால், அதை நிரூபிக்கும் பொறுப்பு ஆதார் எண் வைத்திருப்பவரையே சாரும்."
மேலும், பிறந்த தேதியை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்த தங்களது சொந்த அணுகுமுறையை தீர்மானிப்பது, அந்தந்த ஆதார் பயனர் முகமைகள் மற்றும் இ-கேஒய்சி பயனர் முகமைகளின் பொறுப்பாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பிறந்த தேதி சான்றை பற்றி இந்த சட்டம் எதுவும் கூறவில்லை என்றாலும், "அங்கீகார கேள்விகளுக்காக, பிறந்த தேதி உட்பட மக்கள்தொகைத் தகவல்களை சேகரித்தல், புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கு இது வழிவகை செய்கிறது," என்று அந்த ஆவணம் தெரிவித்தது.
ஆக ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ பயன்பாடு தான் என்ன? இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? "ஆதார் எண்ணின் அடிப்படையில் தன்னை அடையாளப்படுத்தி கொண்டு மானியம் / சேவையை பெற முயற்சிக்கும் ஒரு நபர், பதிவு செய்யும் நேரத்தில் தனது பயோமெட்ரிக்ஸ் மற்றும் பிற ஆவணங்களை வழங்கி ஆதார் பதிவு செய்த அதே நபர்தான் என்று நிரூபிக்க ஆதார் ஒரு சான்று மட்டுமே," என்று யுஐடிஏஐ-யின் உதவி தலைமை இயக்குநர் அசோக் குமார் வெளியிட்ட ஒரு தனி குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை அப்டேட் செய்ய (மாற்றுவது, புதுப்பிப்பது) என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? ஆதாரில் பிறந்த தேதியை புதுப்பிக்க, தனிநபர்கள் பிறப்பு சான்றிதழ், செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), சேவை புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். ஆதாரில் உங்கள் பிறந்த தேதியை புதுப்பிக்க, பின்வரும் செல்லுபடியாகும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்கலாம்:
- பிறப்பு சான்றிதழ்
- செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டு
- சேவை புகைப்பட அடையாள அட்டை
- ஓய்வூதியதாரர் புகைப்பட அடையாள அட்டை
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் / சான்றிதழ்
- யுஐடிஏஐ ஆல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பிற ஆவணங்கள்


Click it and Unblock the Notifications