Home
News

ஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.!

ஆதார் பற்றி பல சர்ச்சைகள் பரவலாக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில். யு.ஐ.டி.ஏ.ஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

By Sharath

ஆதார் பற்றி பல சர்ச்சைகள் பரவலாக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில். யு.ஐ.டி.ஏ.ஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட ஆதார் தகவலில் முகவரியை மாற்ற ஒரு புதிய எளிமையான வழியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.!

பொதுமக்களின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு உத்தறிவிட்டது. ஆதார் சேவை மூலம் தனிப்பட்ட நபரின் விவரங்களை எளிதாகப் பயன்படுத்த ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது.

மொபைல் பில்

மொபைல் பில்

இதன் மூலம் கேஸ் இணைப்பு, மொபைல் பில் உள்ளிட்ட பல முக்கியமான தேவைகளுக்கும் இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக உங்கள் கை ரேகை மற்றும் உங்களது முகவரியை அடிப்படையாக எடுத்துக் கொள்கிறது ஆதார் சேவை.

வாடகை வீடு

வாடகை வீடு

நம்மில் பலர் வாடகை வீடுகளில் வேறு ஊர்களில் பணி ரீதியாக இடம் மாற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருப்போம். எனவே ஆதாரில் முகவரியை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். அப்படி முகவரியை மாற்றுவது அவ்வளவு எளிதில் நடக்கும் காரியமில்லை இன்று வரை. உங்கள் முகவரியை மற்ற வேண்டுமெனில், அந்த முகவரியில் நீங்கள் வசிப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ரகசிய குறியீடு

ரகசிய குறியீடு

இந்தச் செயல்முறை பலருக்கும் தலைவலியாக இருப்பதால், UIDAI முகவரியை மாற்ற புதிய எளிய முறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முகவரியை மாற்ற விரும்புபவர்கள் தற்போது தங்கியுள்ள முகவரிக்கு ஆதார் கடிதம் ஒன்றைக் அனுப்ப வேண்டும். அதன்பின் அவர் தங்கியிருக்கும் முகவரிக்கு ரகசிய குறியீடு (Secret Pin) கொண்ட ஆதார் கடிதம் ஒன்று அனுப்பப்படும். பின்பு SSUP ஆன்லைன் போர்ட்டலில் அந்த ரகசிய குறியீட்டை உள்ளிட்டு முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என யு.ஐ.டி.ஏ.ஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

2019 ஜனவரி மாதம்

2019 ஜனவரி மாதம்

இந்தச் சேவை 2019 ஜனவரி மாதம் சோதனை முறை செயல்படுத்தப்பட்டும் என்றும், 2019 ஏப்ரல் இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
UIDAI to Bring New Service for Making Address Update in Aadhaar Easy: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X