ஆதாருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை.!

|

தற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு செயல்படும் பீம் உள்ளிட்ட ஆப்கள் மூலமான பணப்பரிவர்த்தனைகளை நிறுத்தக் கூடாது என்று எஸ்.பி.ஐ வங்கியை தனித்துவ அடையாள ஆணையம்

கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதாருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை.!

ஆதார் எண் பயன்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, பீம், ஏஇபிஎஸ், ஆதார் பே போன்ற ஆப்கள் மூலமான பணபரிவர்த்தனைகளை நிறுத்தப்போவதாக தனித்துவ அடையாள எஸ்.பி.ஐ வங்கி

கடிதம் ஒன்று எழுதியது.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தனித்துவ அடையாள ஆணையம், உச்சநீதிமன்றம் ஆதார் சட்டம் செல்லும் என்றும் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடித்தக்கது.

ஆதாருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை.!

பின்பு பீம் உள்ளிட்ட ஆப்கள் மூலமான பரிவர்த்தனைகளை எஸ்.பி.ஐ வங்கி நிறுத்தினால் அதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான மானியம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. எனவே ஆதார் எண் அடிப்படையிலான ஆப்களின் பரிவர்த்தனைகளை தொடர்ந்து எஸ்.பி.ஐ செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை சமூகவலைதளங்களில் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

ஆதாருக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை.!

தற்போது இந்தியா டிஜிட்டல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. தனியுரிமை சுதந்திரத்தை நாம் முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் போது, தீவிரவாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தனியுரிமையை சாக்கு சொல்ல முடியாது.இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தனியுரிமை ஆணையை நாம் மதிக்கும் போது, இந்தியா டிஜிட்டல் துறையில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
UIDAI Asks Banks To Continue Aadhaar Enabled Payment System: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X