Home
News

ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?

ஆதார் கார்ட் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை UIDAI வெளியிட்டுள்ளது. இனி பழைய முறைகளின் படி ஆதார் கார்ட் கையாள முடியாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

UIDAI வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்

ஆதார் கார்ட்கள் பயன்படுத்துவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆதார் சான்றிதழை கையாளுவதற்கு முன் அதன் பயனர்களின் முழு அனுமதியை பெறுவது இனி கட்டாயம் ஆகும். ஆதார் வைத்திருப்பவர்களின் அனுமதி இல்லாமல் அதை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI புது அறிவிப்பு

Aadhaar Card பயனர்கள் அறிந்து கொள்வது நல்லது

இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொருவரின் பாதுகாப்பு என்பவது அவரவரகள் கடமையே ஆகும். ஆன்லைனில் ஆதார் சான்றிதழை பயன்படுத்தும் அனைவருக்குமான முக்கிய குறிப்புகள் இது என்றாலும், நாம் எப்போது எதற்கு ஆதார் கார்ட்டை பயன்படுத்துவோம் என கணிக்க முடியாது. ஏணைய தேவைகளுக்கு ஆதார் கார்ட்கள் என்பது பிரதான பயன்பாடாக இருக்கிறது. எனவே அனைவரும் இந்த அறிவிப்பை அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

ஆதார் கார்ட் ஆன்லைன் திருத்தம்

ஆன்லைனில் ஆதார் கார்ட் பயன்படுத்தும் அனைவருக்குமான அறிவிப்பாக UIDAI வெளியிட்ட இந்த அறிவிப்பு இருக்கிறது. குறிப்பாக ஆன்லைன் மூலம் ஆதார் கார்ட் இல் மாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களுக்கானதாகவும் இது இருக்கிறது.

சரிபார்ப்பு செயல்முறைக்கு முழு அனுமதி தேவை

UIDAI வெளியிட்டுள்ள அறிவிப்பு என்னவென்று பார்க்கலாம். ஆதார் கார்ட் இல் சரிபார்ப்பு செயல்முறை அங்கீகரிக்கப்படுவதற்கு அதன் பயனர்கள் தங்கள் முழு ஒப்புதலை அளித்திருக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்பித்திருக்க வேண்டும் என அறிவிறுத்தி உள்ளது. அதாவது ஆதார் கார்ட் பயனர்களின் அணுகல் இல்லாமல் யாரும் இதை கையாண்டுவிடக் கூடாது என இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI புது அறிவிப்பு

ஆதார் கார்ட் மோசடி

ஆதார் கார்ட்களை வழங்கும் அமைப்பும், அதை திருத்தம் செய்யும் நிறுவனங்களும் முறையாக செயல்பட வேண்டும் என்பது அவசியம். ஆதார் கார்ட் தொடர்பான எந்தவொரு வகையான மோசடியையும் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என UIDAI தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மோசடி குறித்து புகார்களை பதிவு செய்வதற்கு என டோல் ஃப்ரீ எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்ட் புகார் எண்

ஆதார் புதுப்பிப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அனைத்து பயனர்களும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஆதார் அமைப்பு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும் நம் பாதுகாப்பு நம் கையில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதார் கார்ட் இல் மொபைல் எண் இணைப்பது எப்படி?

ஆதார் கார்ட் உடன் மொபைல் எண்ணை இணைப்பது என்பதை மிக கட்டாயம். ஆதாரில் எந்தவொரு மாற்றத்தை மேற்கொள்வதற்கும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் என்பது மிக அவசியம். UIDAI தரவுத்தளத்தில் உங்கள் எண்ணை எவ்வாறு இணைப்பது அல்லது மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்து வைத்திருப்பது நல்ல விஷயமாகும். ஆதார் கார்ட் இல் மாற்றம் செய்ய முணையும் போது தான் பலருக்கும் ஒரு யோசனை வரும்.. ஆதார் உடன் எந்த மொபைல் எண்ணை இணைத்தோம், அந்த சிம் கார்ட் தற்போது பயன்படுத்தவில்லையே என்று.

ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI புது அறிவிப்பு

இ-சேவா மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்

குறிப்பிட்ட தகவல்களை நாமே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆனால் சில முக்கிய தகவல்களை மாற்றுவதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஆதார் கார்ட் இல் மொபைல் எண் என்பது மிக முக்கியம். ஆதாரில் மாற்றம் உள்ளிட்ட பல பணிகளை கையாளுவதற்கும் மொபைல் எண் தான் உதவும்.

ஆதார் கார்ட் திருத்தத்திற்கு எத்தனை நாள் எடுக்கும்?

எனவே அத்தகைய மொபைல் எண்ணை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் பழைய எண்ணை பயன்படுத்தவில்லை என்றாலோ புது எண் இணைக்க விரும்பினாலோ உடனே ஆதார் மையத்திற்கு நேரில் சென்று அதை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஆதார் கார்ட்டில் இது மட்டுமல்ல உங்கள் அப்போதைய சரியான தகவலை அப்டேட் ஆக வைத்துக் கொள்வது நல்லது.

அவசர தேவை இருக்கும் போது அதை உடனே மாற்றம் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காரணம் ஆதார் கார்ட் இல் ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்தாற்போல் குறிப்பிட்ட நாட்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

More from GizBot

Best Mobiles in India

English summary
UIDAI Announced New Guidelines For Aadhaar Card Users: Everyone Should Know this
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X