ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக்கை.!

டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்எஸ் ஷர்மா தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மேலும், இந்த எண்ணை வைத்து எனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்று சவால் விடுத்தார

|

ஆதார் என்பது சாதாரண மக்களின் அதிகாரம் ஆகும். ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் போது, ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில், ரத்த வகை, குடும்ப அட்டை எண், மெயில் ஐடி, போன் நம்பர், பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவைகள் பதிவு செய்யபட்டிருக்கும்.

ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக

மேலும் ஆதார் புகைப்படம் எடுக்கும் போதும், கண் விழி, கைரேகையும் மேற்கூறி தகவல்களும் இதில் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஆதார் முக்கியத்துவம்:

ஆதார் முக்கியத்துவம்:

இந்திய அரசால் ஆதார் வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க ஆதார் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நமது புகைப்படம் மற்றும் முகவரியும் அட்டையில் பதிவு செய்யபட்டிருக்கும். தற்போது கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, பான் எண், மகளிர் குழு, சிம் கார்டு வாங்குவது, அரசு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் எண் முக்கியமாக தேவைப்படுகிறது.

 சமூக வலைதளத்தில் சவால்:

சமூக வலைதளத்தில் சவால்:

டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்எஸ் ஷர்மா தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மேலும், இந்த எண்ணை வைத்து எனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்று சவால் விடுத்தார்.

ஹேக்கர்கள் வெளியிட்ட அதிர்ச்சி:

ஹேக்கர்கள் வெளியிட்ட அதிர்ச்சி:

ஆர்எஸ் ஷர்மா தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட எண்ணை வைத்துக் கொண்டு ஹேக்கர்கள் பல்வேறு தகவல்களையும் திரட்டி வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் பிரச்னை எழுப்பட்டது.

சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம்:

சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம்:

சமூக வலைதளம் உள்ளிட்ட எந்த ஒரு இணைதளத்திலும், பொது வெளியிலும் ஆதார் எண்களை வெளியிட வேண்டாம் ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அரசின் சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டம் 2016ன் படி தடை:

சட்டம் 2016ன் படி தடை:

பாஸ்போர்ட், பான்கார்டு, வங்கிகணக்கு போல ஆதார் எண்ணும் தனிப்பட்ட விவகாரமாகும். அந்த எண்களை பொது வெளியில் பகிர்வதால் பல்வேறு பாதிப்புகளை தனிப்பட்ட நபருக்கு ஏற்படும். மற்றவர்களுக்கு பகிர்வது ஆதார் ஆணைய சட்டம் 201ன் படி தடை செய்யபட்டுள்ளது. அடுத்தவர்களின் ஆதார் எண்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

Best Mobiles in India

English summary
UIDAI advises people to refrain from posting Aadhaar number on social media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X