Subscribe to Gizbot

1942 - 2013 : உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு' சம்பவங்கள்..!

Written By:

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களையும், மாபெரும் தொலைநோக்கிகளையும் பயன்படுத்தி அண்டம் முழுக்க வேற்றுகிரக வாசிகளை தேடுவது நேரத்தை வீணடிக்கும் தேவை இல்லாத ஒரு செயல் என்கிறது ஒரு கூட்டம். ஏனெனில், நாம் நினைப்பது போல வேற்றுகிரக வாசிகள் விண்வெளியில் அல்ல, நம் பூமியிலேயே தான் இருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் கருத்து..!

புதிய சர்ச்சை : ஏலியன்கள் அனுப்பிய 'மேசேஜ்கள்'..!

அவர்களின் நம்பிக்கைப்படியே, உலகின் பல்வேறு பகுதிகளில் யூஎஃப்ஓ (UFO - unidentified flying object) எனப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக ஆயிரக்கணக்கான மக்களின் சாட்சியம் உண்டு. அவைகளில் பிரமைகள், கட்டுக்கதைகள், புரளிகள் என்பது போக இதுவரை உலகில் பதிவான பறக்கும் தட்டு சம்பவங்களிலேயே மிகவும் நம்பகமான 10 சம்பவங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
10. 1942 :

10. 1942 :

பேட்டில் ஆஃப் லாஸ் ஏன்ஜலஸ் (Battle of Los Angeles) சம்பவம்.

பிரம்மாண்ட ஒளி :

பிரம்மாண்ட ஒளி :

வானில் தென்பட்ட இனம் புரியாத பறக்கும் தட்டை நோக்கி அமெரிக்க ராணுவமும் போர் விமானங்களும் துப்பாக்கி சூடு நடத்தியும், பிரமாண்டமான ஒளி விளக்கு எழுப்பியும் அது தெளிவாக என்ன என்று கண்டுப்பிடிக்கபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

09. 1965 :

09. 1965 :

பென்னிஸ்லைவானியாவின் (Kecksburg, Pennsylvania) கெக்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள காட்டில் வானில் இருந்து வந்து விழுந்த தீப்பந்து..!

கைப்பற்றல் :

கைப்பற்றல் :

அந்த சம்பவம் நடந்த உடனேயே அரசாங்கம் அந்த இடத்தை சுற்றி வளைத்து இனம் புரியாத அந்த தீப்பந்தை கைப்பற்றினாலும், இன்று வரை அதுபற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்துள்ளது நாசா.

08. 1977 :

08. 1977 :

பிரேஸில் நாட்டில் உள்ள கோலரேஸ் (Colares) என்ற தீவில் பல முறை யூஎஃப்ஓ சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதை ஆபரேஷன் சாசர் (Operation Sauce) என்றும் கூறுவார்கள்.

சாட்சியங்கள் :

சாட்சியங்கள் :

அந்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியங்களில் (மொத்தம் 400 பேர்) பலர் தாங்கள் ரேடியேஷன் கதிர்கள் மூலம் தாக்கப்பட்டதாகவும், சிலர் தங்கள் ரத்தம் உறிஞ்சுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீல் :

சீல் :

இது சார்பாக நடத்தப்பட்ட அரசு விசாரணையும் 1990-களிலேயே 'சீல்' வைத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. 1986 :

07. 1986 :

பிரகாசமான இனம் புரியாத ஒரு பறக்கும் தட்டை, ஜப்பான் விமானம் ஒன்று பின் தொடர்ந்த சம்பவம்.

ஜப்பான் விமானம் :

ஜப்பான் விமானம் :

வைன் (wine) ஏற்றிக்கொண்டு பாரிஸில் இருந்து டோக்கியோ செல்லும் ஜப்பான் விமானத்தை (ஃப்ளைட் 1628) 29 வருட அனுபவமிக்க கேப்டன் ஆன கெஞ்சு டேரௌச்சி (Kenju Terauchi) அலாஸ்கா மீது இயக்கி கொண்டிருந்தார்.

பிரகாசமான பறக்கும் தட்டு :

பிரகாசமான பறக்கும் தட்டு :

அப்போது தங்கள் விமானத்தை விட 3 மடங்கு பெரிய அளவில் உள்ள பிரகாசமான பறக்கும் தட்டு ஒன்றை விமான குழுவினர் அனைவரும் பார்த்துள்ளனர்.

50 நிமிடங்கள் :

50 நிமிடங்கள் :

அது மட்டுமின்றி சுமார் 300 மைல், அதாவது 50 நிமிடங்கள் வரை அதை பின் தொடர்ந்தும் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. 1997 :

06. 1997 :

அரிஸோனா நகரில் நடந்த பீனிக்ஸ் லைட் (Phoenix Light) சம்பவம்..!

லைட்கள் :

லைட்கள் :

முதலில் வரிசையாக 6 லைட்கள் தெரிந்தது பின் அதை தொடர்ந்து 8 லைட்கள், பின் அதை தொடர்ந்து 9 என மொத்தம் 5 நகரங்களில் இது காணப் பட்டதாக சாட்சியங்கள் உண்டு.

10 மணி முதல் 2 மணி வரை :

10 மணி முதல் 2 மணி வரை :

1977-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு தொடங்கிய இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணி அளவில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

05. 2010 :

05. 2010 :

சிலி (Chile) நாட்டில் உள்ள சாண்டியாகோ (Santiago) நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது பதிவான பறக்கும் தட்டு சம்பவம்..!

04. 2011 :

04. 2011 :

ஜெருசெலத்தில் (Jerusalem) முதல் முறையாக பதிவான இனம் புரியாத பறக்கும் தட்டு சம்பவம்.

சுற்றி திரிந்தது :

சுற்றி திரிந்தது :

விண்ணை நோக்கி பறந்து செல்வதற்கு முன் ஜெருசலம் நகரை இனம் புரியாத பறக்கும் தட்டு ஒன்று சுற்றி திரிந்ததாக பல சாட்சியங்கள் உண்டு.

புரளி :

புரளி :

ஆனால், இஸ்ரேல் அரசாங்கம் அந்த சம்பவத்தை இன்று வரை புரளி என்று கூறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. 2012 :

03. 2012 :

2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழாவின் வான வேடிக்கை நிகழ்ச்சியின் போது பதிவான பறக்கும் தட்டு சம்பவம்..!

02. 2012 / 2013 :

02. 2012 / 2013 :

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப் பட்ட வீடியோ ஒன்றில் பதிவான பறக்கும் தட்டு..!

01. 2013 :

01. 2013 :

மெல்போர்ன் நகரின் மேல் உலாவிய இனம் புரியாத பறக்கும் தட்டு ஒன்று மொபைல் கேமிரா மற்றும் இன்ஃப்ரா ரெட் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
இதுவரை பதிவானதிலேயே மிகவும் நம்பகமான பறக்கும் தட்டு சம்பவங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot