பணம் சம்பாதிப்பது இந்தியாவில், காட்டிக்கொடுப்பதோ சீனாவிற்கு - சிக்கியது யூசி ப்ரவுஸர்.!

அலிபாபாவிற்கு சொந்தமான யூசி ப்ராப்ரவுஸர் மீதுள்ள குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அது தடை செய்யப்படலாம்.

|

வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களை கூட பார்க்கலாம், ஆனால் இணைய பயன்பாட்டிற்கான யூசி ப்ரவுஸர் (UC Browser) இல்லாத ஒரு சாதனத்தை காண இயலாது. அந்த அளவிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரவுஸராக யூசி ப்ரவுஸர் திகழ்கிறது.

பணம் சம்பாதிப்பது இந்தியாவில், காட்டிக்கொடுப்பதோ சீனாவிற்கு.!

அப்படியான யூசி ப்ரவுஸர் மீது இந்தியா அரசாங்கம் ஒரு நம்பமுடியாத குற்றசாட்டை சுமத்தியுள்ளது. அதாவது, இந்திய பயனாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை, யூசி ப்ரவுஸர் இதர நாடுகளுக்கு அனுப்புவதாய் குற்றம் சாட்டப்பட்டு கண்காணிப்புக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ரிமோட் சர்வருக்கு அனுப்புகிறது

ரிமோட் சர்வருக்கு அனுப்புகிறது

அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான யூசி ப்ரவுஸர் ஆனது, பயனர் விவரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை ஒரு ரிமோட் சர்வருக்கு அனுப்புவது சார்ந்த ஆய்வை ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு ஆய்வகம் நிகழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிரூபிக்கப்பட்டால், தடை செய்யப்படலாம்

நிரூபிக்கப்பட்டால், தடை செய்யப்படலாம்

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையமானது (C-DAC - மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை) "அலிபாபாவிற்கு சொந்தமான யூசி ப்ராப்ரவுஸர் மீதுள்ள குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அது தடை செய்யப்படலாம். ஆனால் தடை செய்வது தேவைதானா என்பதை இந்த கட்டத்தில் தெளிவாக கூறமுடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளதாக இன்னொரு அறிக்கை கூறியுள்ளது.

இஎம்இஐ எண்

இஎம்இஐ எண்

வெளியான தகவல்களின்படி, யூசி பரவுஸர் ஆனது வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் சாதனங்களின் இஎம்இஐ (IMEI) எண் மற்றும் லோக்கேஷன் டேட்டா போன்ற உள்ளடக்கிய தரவுகளை சீனாவின் சேவையகத்திற்கு அனுப்புகிறது என்று கூறப்படுகிறது.

ஒரு தனியுரிமை ஆபத்து

ஒரு தனியுரிமை ஆபத்து

ஒரு கனடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குவானது "கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் - அலிபாபா க்ரூப் ஹோல்டிங் லிமிடெட் ஆனது முக்கியமான பயனர் தரவை கசியவிட்டதற்காக 1 மில்லியன் டாலருக்கும் மேலாக செலுத்தியாகவும், அது ஒரு தனியுரிமை ஆபத்து" என்று கூறியுள்ளது.

மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட முறையில்

மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட முறையில்

சீனம் மற்றும் ஆங்கில மொழிகள் கொண்ட யூசி ப்ரவுஸர் பதிப்புகள், பயனர்களின் இடம், தேடல் விவரங்கள், மொபைல் சந்தாதாரர், சாதன எண்கள் போன்ற அடையாளம் காணக்கூடிய தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் எளிமையாக அனுப்பி வைக்கும் என்கிறது சிட்டிசன் லேப்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

கடந்த வாரம், பெரும்பாலான சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்காகை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை முன்வைக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத அளவு

கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத அளவு

மொபைல் உற்பத்தியாளர்களும், மென்பொருள் வழங்குநர்களும் பயனர்களை கண்காணிப்பதற்கான ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். அது வெளிப்படும்போது சேகரிக்கப்பட்ட தரவின் அளவு நாம் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத அளவு இருக்கும். இதற்கு யூசி ப்ரவுஸர் விதிவிலக்காக இருக்காது.

க்ரோம் மற்றும் ஓபெரா ப்ரவுஸர்

க்ரோம் மற்றும் ஓபெரா ப்ரவுஸர்

ஸ்டாட்வுண்ட் ஆய்வகத்தின் படி, யூசி ப்ரவுஸர் - இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் உலாவியாகும், இது சந்தையில் 50 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது, க்ரோம் மற்றும் ஓபெரா ப்ரவுஸர்களை பின்தள்ளி பட்டியலில் நிலைத்திருக்கிறது. அதன் உச்சத்தில், யூசி ப்ரவுஸர் இந்திய சந்தையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பங்கை பெற்றது. அதன்பின்னர் கூகுள் நிறுவனத்தின் க்ரோம் ப்ரவுஸரிடம் சில இடங்களை இழந்துள்ளது.

பதட்டங்கள்

பதட்டங்கள்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் உயர்ந்த மட்டத்தில் இருக்கும் இந்நிலைபாட்டில், மற்ற நாட்டிற்கு அனுப்பும் எந்தவொரு இந்தியா சார்ந்த தகவலும், எந்த அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியாது.

Best Mobiles in India

Read more about:
English summary
UC Browser Reportedly Under Government Scanner for Sending Data to China. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X