சரக்கடித்த பயணிகளை கண்டறியும் கருவி! காப்புரிமை கேட்கும் உபர்.!

இந்த கருவியானது ஸ்மார்ட்போன் ஊடாடல் மதிப்பீட்டு தொடர்களின் மூலம் பயணிகளின் "பயனர் நிலையை" கண்டறிகிறது.

By GizBot Bureau
|

பயனர்களின் நிலையை கண்டறியும் அமைப்பு/கருவிக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கிறது உபர் நிறுவனம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த புதிய கருவியின் மூலம், மது அருந்தி விட்டு வரும் நபர்களை கண்டறியவும், 'சாதாரன நிலையில்' இருந்து எவ்வளவு தூரம் சென்றுள்ளனர் என்பதையும் கண்டறியமுடியும்.

சரக்கடித்த பயணிகளை கண்டறியும் கருவி! காப்புரிமை கேட்கும் உபர்.!

இந்த கருவியானது ஸ்மார்ட்போன் ஊடாடல் மதிப்பீட்டு தொடர்களின் மூலம் பயணிகளின் "பயனர் நிலையை" கண்டறிகிறது. "உள்ளிடும் தரவுகளின் துல்லியம், உள்ளிடும் தரவுகளின் வேகம், இடைமுக ஊடாடல் நடத்தை, கருவியின் கோணம், நடக்கும் வேகம் போன்ற செயல்பாடுகளையும் இது கண்காணிக்கும். மேலும் இந்த கருவி இடம்,நேரம் மற்றும் இதர காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

 வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஓட்டுநர்களுக்கு தங்களின் வாடிக்கையாளர்கள் பற்றி அதிக தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கருவி வழிவகுக்கிறது. இதன் மூலம் மது அருந்திவிட்டு வரும் வாடிக்கையாளர்களை ஓட்டுநர்கள் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி இதன் மூலம் கூடுதல் கண்காணிப்பு அமைப்பும் உபர் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. மது அருந்திவிட்டு வந்த வாடிக்கையாளர்களிடம், உபர் ஓட்டுநர்கள் தவறாக நடக்க முயன்றனர் என்ற பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளை புதிய வழியில் உபர் கையாள முடியும்.

பெண்கள்

பெண்கள்

பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பல்வேறு பயனர்நிலையை பட்டியலிட்டு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். உபர் கூறுவதை போல, அமெரிக்காவில் குடிப்பழக்கம் என்பது கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 2005லிருந்து 2015ம் ஆண்டு வரை மட்டும் அதிகமாக குடிப்பவர்களின் எண்ணிக்கை 17% உயர்ந்துள்ளது. கடந்த காலத்தை விட பெண்கள் அதிகமாக குடிக்கின்றனர் என்கிறார்கள் வல்லுநர்கள்.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை குறைப்பதற்கு உபர் உதவுகிறாத என்பதில் வல்லுநர்கள் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளனர். ஆனால் கடந்த காலத்தில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை குறைப்பதற்காக மதுஅருந்திய பயணிகள் வீடுகளுக்கு செல்வதற்கு உதவியது உபர். ஆனால் உபர் ஓட்டுநர்களின் கருத்துப்படி, மதுஅருந்திய பயணிகளால் அவர்கள் அசவுகரியமாக உணர்கின்றனர். சில ஓட்டுநர்கள் தாங்கள் மதுஅருந்திய வாடிக்கையாளர்கள் கிடைக்கும் போது அதிர்ச்சியடைவதாகவும் கூறுகின்றனர்.

உபர்

உபர்

பயணிகளின் எதிர்பார்ப்பது என்னவென்றால், பாதுகாப்பாக வீடு சென்று சேர வேண்டும் என்பதை தவிர்த்து வேறொன்றும் இல்லை.பயணிகளின் நிலையை ஏதோ ஒன்று சந்தேகக்கண்ணோடு கண்காணிப்பது, அவர்களுக்கு அசவுகரியமாகவும், அதேநேரம் உபர் நிறுவனத்திற்கு பல்வேறு பொறுப்புகளை தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான வழியாகவும் இந்த கருவி இருக்கும்.

காப்புரிமை

காப்புரிமை

ஆனால் இந்த கருவிக்காக உபர் நிறுவனத்திற்கு காப்புரிமை கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. அமெரிக்க உபர் வாடிக்கையாளர்கள் அதை தெரிந்து கொள்ள சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Uber's patent for a drunk passenger detector sounds mortifying: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X