காத்திருந்தால் பயணக் கட்டணம் குறைவு : உபர் அதிரடி!
கீழே குறிப்பிட்டுள்ள ஸ்கிரீன்சாட் புகைப்படத்தில், மாலை 5 மணிக்கு மேல் பயணக்கட்டணம் 25% குறைக்கப்படுவதை காணலாம்.
என்னதான் பீக் அவராக இருந்தாலும், பயணக்கட்டணம் உச்சத்தில் இருந்தாலும் சில சமயங்களில் உடனடியாக உபர் மூலம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் சில நேரங்களில் உபர் மூலம் வரும் வாகனம் வர சில நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை என இருக்கும் பட்சத்தில், அந்த சமயத்தில் தனது புதிய வசதியின் மூலம் காத்திருக்கும் நேரத்திற்கு ஏற்றவாறு பயணக்கட்டணம் மலிவாக கிடைக்குமாறு அனுமதிக்கிறது உபர்.

உபர் பணியாளர் ஒருவர் தனது டிவீட்டில், பயனர்களுக்கு எவ்வளவு நேரத்திற்கு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் ஸ்கிரீன்சாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.ஆனால் அந்த டிவீட் நீக்கப்பட்ட போதிலும், அந்நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் இப்புதிய வசதியை அறிமுகப்படுத்துவது உண்மைதான் என கூறியுள்ளார்.

தள்ளுபடி
கீழே குறிப்பிட்டுள்ள ஸ்கிரீன்சாட் புகைப்படத்தில், மாலை 5 மணிக்கு மேல் பயணக்கட்டணம் 25% குறைக்கப்படுவதை காணலாம். ஆனால் இந்த தள்ளுபடி சதவீதம் ஒரே அளவிலானதா அல்லது இதை விட அதிகமாக இருக்குமா என்பதைப்பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சான்பிரான்சிஸ்கோ
இப்போதைக்கு, சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உபர் பணியாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது பரிசோதனை கட்டத்தில் இருக்கும் நிலையில், அதன் முடிவுகளை பொறுத்து அனைவரும் இந்த வசதி விரிவாக்கப்படும்.

பயணக்கட்டணம்
நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்கள் மேலும் கூறுகையில், பயணிகள் பயணக்கட்டணம் மலிவாக இருக்கும் எனபதற்காகத் தான் பகிரல்-பயணங்களை விரும்புகின்றனர். அது போலவே சிறிது நேரம் காத்திருப்பதன் மூலம் பயணிகள் பணத்தை மிச்சப்படுத்தும் வசதியை தற்போது பரிசோதித்துக் கொண்டுள்ளனர்

பொறுத்தார் பூமி ஆள்வார்
இந்த வசதி செயலிகளை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் பெரிய மாற்றமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் எந்த நேரத்தில் பயணத்தை பதிவு செய்வது சிறந்தது என்பதை முன்கூட்டியே கணிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வேளை உபர் முதலாளி 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று சொல்லாமல் சொல்கிராரோ!


Click it and Unblock the Notifications