சென்னை வாசிகளுக்கு உபெர் நிறுவனத்தின் பரிசு..!!

By Meganathan
|

எங்கும் போட்டி, எதிலும் போட்டி என பல்வேறு துறைகளிலும் போட்டி இருக்கும் நிலையில் இன்றைய டாப் ட்ரென்டாக இருப்பது செயலிகள் தான். எதை செய்தாலும் செயலி வடிவில் இருந்தால் நிச்சயம் அந்த திட்டம் வெற்றி பெறும் என்ற நிலைமை உருவாகி விட்டது. திரைப்படம், பொழுதுபோக்கு, பொது அறிவு என எல்லாவற்றிற்கும் செயலிகள் சந்தையில் கிடைக்கின்றன.

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

அப்படியாக மக்கள் போக்குவரத்தை எளிமையாக்கும் நிறைய நிறுவனங்களின் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றது. ஓலா, டாக்ஸி ஃபார் ஷூயர் என இந்த பட்டியல் நீளும் வேலையில் பெரும்பாலான செயலிகளில் பணம் செலுத்த க்ரெட்டிட், டெபிட் கார்டு, பணம் என பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உபெர் நிறுவனம் மட்டும் பணம் செலுத்தும் சேவையை வழங்காமல் இருந்தது.

ஸ்மார்ட்போன் வரலாறு : ஒரு பார்வை..!

தற்சமயம் சந்தையில் நிலவும் போட்டி மற்றும் இதர காரணங்களுக்காக அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை நேரடியாக பணம் செலுத்தும் சேவையை சென்னையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

துவக்கம்

துவக்கம்

உபெர் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பணம் பெற்று கொள்ளும் முறையினை இந்தாண்டு மே மாதம் முதல் துவங்கியது.

நீட்டிப்பு

நீட்டிப்பு

அதன்படி முதலில் ஹைத்ராபாத் நகரில் இத்திட்டம் சோதிக்கப்பட்டதோடு அகமதாபாத், சண்டிகர், ஜெய்பூர், கோச்சின் மற்றும் பூனே போன்ற நகரங்களிலும் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை

சென்னை

இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பணத்தை பெற்று கொள்ளும் திட்டம் சென்னையிலும் துவங்கப்பட்டுள்ளது.

சேவை

சேவை

இதன் மூலம் சென்னை வாடிக்கையாளர்கள் உபெர்கோ மற்றும் உபேர்எக்ஸ் சேவைகளைுக்கு ஓட்டுநரிடம் நேரடியாக பணத்தை செலுத்த முடியும்.

இடம்

இடம்

அந்த வகையில் இந்தியாவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட ஏழாவது நகரமாகவும் உலகளவில் எட்டாவது இடத்திலும் சென்னை இருக்கின்றது.

தேர்வு

தேர்வு

இதன்படி உபெர் செயலியில் பணத்தை செலுத்தும் ஆப்ஷன்களில் கேஷ் (CASH) என்ற ஆப்ஷனினை பயணத்திற்கு முன்பாகவே தேர்வு செய்திட வேண்டும்.

பணம்

பணம்

இனி பயணம் செய்யும் போது உங்களது பேடிஎம், க்ரெட்டிட் அல்லது டெபிட் கார்டுகளில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

சோதனை

சோதனை

தற்சமயம் சோதனையில் இருப்பதால் அனைத்து நகரங்களிலும் இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

க்ரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தும் முறையினை உபெர் நிறுவனம் கடந்த மாதம் மீண்டும் துவங்கியதோடு, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையினை அந்நிறுவனம் இம்மாத துவக்கத்தில் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Uber has started accepting cash payments in Chennai for uberGO and uberX rides.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X