15 நிமிட பயணத்துக்கு 32 லட்சம் ரூபாய் பில்.. ஆடி போன Uber பயணி: அப்படி எங்க போனாரு தெரியுமா?

|

அண்ணே, அந்த இடத்துக்கு போனும் எவ்வளவு? சரியா இடத்தை சொல்லுங்க அங்கிருந்து எங்க போனும். அப்படியே அங்கிருந்து கிட்டக்க தான் அண்ணே.. சரி இவ்வளவு கொடுங்க. என்னணே இந்தா இருக்கு இதுக்கு இவ்வளவு கேட்குறீங்க, அதெல்லாம் முடியாது. இவ்வளவு வேணும்னா கொடுக்கிறேன். பெட்ரோல் விலை எல்லாம் ஏறிப் போச்சுப்பா சரி இதை கொடுங்க. சரிங்கண்ணே ஆனா இது ரொம்ப அதிகம்ணே.

இப்படி ஆட்டோ டிரைவர்களுடன் வாதாடியாக காலம் எல்லாம் மலையேறி விட்டது. சார், கேப்டன் பேசுறேன். லொகேஷன் அதுதானா, சரி வாங்க. அவ்வளவு தான். பேரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. முடிவு முடிவு தான்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

ஆம், நாம் இப்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம்மை பல கட்டம் மேல்நோக்கி இழுத்திருக்கிறது. அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. உணவு முதல் பயணம் வரை அனைத்தும் ஆர்டர் போடுவது ஸ்மார்ட்போனில் தான். இதில் அவ்வப்போது பிழைகள் ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. அதன்படியான ஒரு நிகழ்வை தான் பார்க்கப்போகிறோம்.

வாகனம் புக் செய்த நபர்

வாகனம் புக் செய்த நபர்

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் பப் சென்று நண்பரை சந்திக்க வாகனம் புக் செய்து பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் தான் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

உபர் இல் அதிகபட்சமாக ஆயிரக் கணக்கில் பில் வருவதை சந்தித்து இருப்போம். ஆனால் இங்கே ஒரு புது கார் இன் அசல் விலைக்கு இணையாக பயண பில் மட்டும் ஒருவருக்கு வந்திருக்கிறது.

பப்பிற்கு பயணம் செய்த நபர்

பப்பிற்கு பயணம் செய்த நபர்

இங்கிலாந்தை சேர்ந்த 22 வயது இளைஞரான ஆலிவர் கப்லான் தனது வேலையை முடித்து விட்டு ரைடு-ஷேர் பயன்பாட்டில் ஒரு வாகனம் புக் செய்துள்ளார்.

தனது நண்பரை சந்திக்க விட்ச்வுட்டில் உள்ள ஒரு பப்பிற்கு டிராப் லொகேஷனாக அமைத்திருக்கிறார்.அவர் இருந்த இடத்தில் இருந்து நான்கு மைல்கள் தொலைவில் அந்த பப் லொகேஷன் அமைந்திருக்கிறது.

சவாரிக்கான விலை $11 மற்றும் $12 க்கு இடையில் என மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. சரி என்று உபரில் பயணம் செய்து பப்பை அடைந்துள்ளார்.

ரூ.32 லட்சம் பில் கட்டணம்

ரூ.32 லட்சம் பில் கட்டணம்

தனது நண்பருடன் இரவு முழுவதும் என்ஜாய் செய்துவிட்டு, அடுத்த நாள் காலை ஹேங்ஓவர் நிலையில் தனது மொபைலை செக் செய்துள்ளார்.

அதில் உள்ள மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவருக்கு உபரிடம் இருந்து பயண சவாரிக்கான கட்டணம் குறித்த மெசேஜ் வந்திருக்கிறது. அதில் நேற்று நீங்கள் செய்த சவாரிக் கட்டணம் $39,317 (சுமார் ரூ. 32,51,300) என பில் அனுப்பப்பட்டுள்ளது.

ஆலிவர் அளித்த விளக்கம்

ஆலிவர் அளித்த விளக்கம்

இரவில் வேலையை முடித்து விட்டு எப்போதும் செல்லும் வழியில் உள்ள ஒரு பப்பிற்கு உபர் புக் செய்தேன். டிரைவர் வந்தார் நான் உபரில் ஏறினேன், நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் 15 நிமிடத்தில் அழைத்துச் சென்றார். அவ்வளவு தான், என ஆலிவர் மான்செஸ்டர் ஈவ்னிங் செய்தித் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

உபர் அளித்த விளக்கம்

உபர் அளித்த விளக்கம்

இதையடுத்து அந்த நபர் உபரைத் தொடர்பு கொண்டு கட்டணத்துக்கான விளக்கம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு உபர் அளித்த பதில் இன்னும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து உபர் புக் செய்த நபரின் லொகேஷன் ஆஸ்திரேலியாவுக்கு செட் ஆகி இருக்கிறது. அதுவே இந்த கட்டணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறுதலாக லொகேஷன் செட் ஆகி உள்ளது எனவும் நீங்கள் செட் செய்த பப் பெயரில் ஆஸ்திரேலியாவில் ஒரு பப் இருக்கிறது எனவும் அந்த பப் லொகேஷனில் செட் ஆகி இருக்கிறது எனவும் உபர் தெரிவித்திருக்கிறது.

வங்கிக் கணக்கில் பணம் எடுக்கவில்லை

வங்கிக் கணக்கில் பணம் எடுக்கவில்லை

உபர் இல் பயணம் செய்த நபரின் வங்கிக் கணக்கில் அவ்வளவு தொகை இல்லாத காரணத்தால் அந்தத் தொகை அவரது வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Uber passenger was shocked to see a bill of Rs.32 lakh for a 15-minute ride

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X