வீடுவீடுக்கு 'கஞ்சா' டெலிவரி செய்யும் Uber Eats.. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்! 18+ க்கு மட்டும்

|

கேட்ஜெட்ஸ் விற்கத் தொடங்கிய ஆன்லைன் விற்பனை தளங்கள் தற்போது மளிகைப் பொருட்கள் முதல் துணி வகைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்து வளர்ச்சி அடைந்திருக்கிறது. உணவு விற்பனை தளங்களும் வளர்ச்சி அடைய வேண்டாமா? எனவே உணவு விற்பனை தளங்கள் தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் டெலிவரி செய்யும் பணிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதெல்லாம் சரிதானா? இந்த வளர்ச்சி தேவையா?..

உபர் கஞ்சா டெலிவரி

உபர் கஞ்சா டெலிவரி

உணவு விற்பனை தளங்களின் இந்த வளர்ச்சி தேவையா என்றால் அது கேள்விக் குறி தான். இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் ஆன்லைன் விற்பனை தளமான உபர் கஞ்சா டெலிவரி பயன்பாட்டை வெளிநாட்டில் அறிமுகம் செய்திருக்கிறது.

பூரண மதுவிலக்கு என்ற கோஷம் இன்னும் தமிழகத்தில் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனவே இதுபோன்ற செயல் நம் பகுதியில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதில் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி

கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி

மரிஜூவானா மற்றும் பிற போதைப் பொருட்களை சட்டப்பூர்வமாக பல நாடுகள் அனுமதித்திருந்தாலும் உலகம் முழுவதும் இதுகுறித்த விவாதம் இன்னும் நடைபெற்று வருகிறது.

மருத்தும் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக கஞ்சாப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று.

இதையடுத்து கனடாவில் கஞ்சாவை வீட்டு வாசலுக்கே Uber டெலிவரி செய்ய இருக்கிறது. உபர் இன் உணவு விநியோக பயன்பாடான Uber Eats தற்போது இந்த டெலிவரி பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

கஞ்சா சந்தையுடன் கூட்டிணைந்த உபர்

கஞ்சா சந்தையுடன் கூட்டிணைந்த உபர்

கஞ்சா கொள்முதலை நிர்வகிக்க Uber Eats கனடாவில் Leafly என்ற கஞ்சா சந்தையுடன் கூட்டிணைந்திருக்கிறது. மூன்றாம் தரப்பு விநியோக பயன்பாடு மூலம் கஞ்சா விநியோகம் என்பது இது உலகின் முதன்முறை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டு வாசலுக்கே கஞ்சா டெலிவரி

வீட்டு வாசலுக்கே கஞ்சா டெலிவரி

Uber தளம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒன்டாரியோ பகுதியில் இதை சோதனை செய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள மக்கள் Uber Eats செயலி மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்ய முடிவதாக கூறப்படுகிறது.

ஆனால் அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கஞ்சா ஆர்டர் செய்த மக்கள் அந்த பகுதியில் ஒரு கடைக்கு சென்று அதை வாங்க வேண்டி இருந்தது. தற்போது வீட்டுக்கு டெலிவரி செய்யும் முறையை Uber Eats செயலி மூலம் உபர் செய்ய இருக்கிறது.

சட்டப்பூர்வ வயது கட்டாயம்

சட்டப்பூர்வ வயது கட்டாயம்

19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், உணவகத்தில் உணவு ஆர்டர் செய்வது போல் உபர் ஈட்ஸ் செயலி மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்ய முடியும். கஞ்சாவின் விலை ஆர்டர் செய்யும் பயன்பாட்டில் காட்டப்படும்.

ஆர்டர் செய்வதற்கு முன் உபர் ஈட்ஸ் சட்டப்பூர்வ வயது தொடர்பான விவரங்கள் குறித்து எச்சரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது

நிதானமாக இருப்பது அவசியம்

நிதானமாக இருப்பது அவசியம்

Axios இல் வெளியான தகவலின்படி, Uber Eats கஞ்சாவை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதாவது ஊழியர்கள் கஞ்சாவை டெலிவரி செய்யும் போது அதை வாங்குபவர்களின் வயது மற்றும் நிதாதனத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கஞ்சா டெலவரி செய்வதில் உள்ள நன்மை

கஞ்சா டெலவரி செய்வதில் உள்ள நன்மை

இதுகுறித்து Uber Eats மேலாளர் கூறுகையில், Leafly போன்ற தொழில்துறை உடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம், டொராண்டோவில் உள்ள மக்களுக்கு சில்லறை ரீதியிலாக கஞ்சாவை டெலிவரி செய்து வருகிறோம். பலவீனமான நிலையில் வாகனம் ஓட்டுவது போன்ற பல வீண் செயல்களை இது குறைக்க உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகத்தில் கஞ்சா டெலிவரி

அதிவேகத்தில் கஞ்சா டெலிவரி

Uber Eats கஞ்சா டெலிவரி டொராண்டோ பகுதியில் கலைக்கட்டி இருக்கிறது. இதுவரை வெளியான தகவலின்படி, அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 45 நிமிடங்களில் தனது வீட்டில் இருந்தபடியே கஞ்சாவை டெலிவரி பெற்றிருக்கின்றனர். Leafly சேவையை விட உபர் ஈட்ஸ் பல இடங்களில் வேகமாக கஞ்சாவை டெலிவரி செய்வதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Uber offers door-to-door Weed delivery through its UberEats app

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X