சரியான நேரத்தில் Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் சிறப்பு சேவை.!

|

பிரபலமான ஆன்லைன் வாகன வாடகை நிறுவனமான உபர் நிறுவனம் இந்தியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சிறப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சேவை பல்வேறு நபர்களுக்கும் பயனுள்ள
வகையில் இருக்கும்.

UberMedic சேவை

UberMedic சேவை

மேலும் இந்த புதிய சேவையின் மூலம் இந்தியாவில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் Uber அறிமுகப்படுத்திய UberMedic சேவையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் இருந்து சுகாதர மையங்களுக்கு ஒரு ப்ரத்தியேக வண்டியை
முன்பதிவு செய்யலாம்.

Uber, Ola போன்ற பயன்பாட்டு

இந்தியாவில் 21நாட்கள் முழு அடைப்பில் உள்ள நிலையில் Uber, Ola போன்ற பயன்பாட்டு அடிப்படையிலான வண்டிகள் இந்தியாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. இதன் காரணமாக அத்தியவசிய சேவைகளிலும்,மிக
முக்கியமான சேவைகள் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களால் வழங்கப்படுகின்றன, எனவே அதை மனதில்வைத்து தற்போது உபர் நிறுவனம் UberMedic என்ற சேவையை கொண்டுவந்துள்ளது.

6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இதில் கை

உபர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், Uber சில மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது,பின்புஅவை ஓட்டுநர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இதில் கை
சுத்திரிப்பான்கள், பாதுகாப்பு கையுறுகைள், முகமூடிகள் மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள்

கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள்

உபர் நிறுவனம் அதன் வலைதளத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு அதிக மதிப்பீடு செயயப்பட்ட ஓட்டுநர்கள மற்றும் அர்ப்பணிப்பு கார்களை எளிதாக்கும், ஓட்டுநர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, அரசாங்க ஆலோசனைக்கு ஏற்ப பங்குதாரர் மருத்துவமனைகளுடன் இணைந்து ஓட்டுநர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவோம் அவற்றில் கை சுத்திகரிப்பான்கள், கையுறைகள், கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் மற்றும் முகமூடிகள் ஆகியவரைஅடங்கும் என்றும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதீப் பரமேஸ்வரன்

உபர் நிறுவனம் ஆனது மருத்துமனைகளின் வலைப்பின்னலுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது, மேலும் நமது உலகளாவிய அனுபவத்தையும தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துகிறது.UberMedic மருத்துவமனைகள் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு மற்றும் சுகாதார வசதிகளுக்கு எளிதாகவும் நம்பகத்தன்மையுடனும் போக்குவரத்து ஏற்பாடு செய்ய அனுமதிக்கிறது. இந்த வாய்ப்பை நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் முன்னணி மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க, நாம் பயன்படுத்துகிறோம்" என்று Uber இந்தியாவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 8மணி முதல் இரவு 8மணி

அதன்படிமருத்துமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள் தங்கள் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கான சேவைகளைப் பெற விரும்பினால், காலை 8மணி முதல் இரவு 8மணி வரை 8046852190 என்ற எண்ணில் UberMedicஅழைக்க வேண்டும். அல்லது UberIndia-covid-help@uber.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் UberMedics-சேவை பெறமுடியும்.

Best Mobiles in India

English summary
Uber Launches UberMedic Service for Healthcare Workers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X