உபேர் ஈட்ஸ் என்ற புதிய உணவு சேவையை தொடங்கியுள்ள உபேர் நிறுவனம்

By Siva
|

கால் டாக்ஸி சேவையில் முன்னணி இடத்தில் உள்ள உபேர் நிறுவனம் தற்போது 'உபேர் ஈட்ஸ்' என்ற உணவு சேவையை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் இதற்காக பெங்களூரில் உள்ள சுமார் 300 ரெஸ்டாரண்ட்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உபேர் ஈட்ஸ் என்ற புதிய உணவு சேவையை தொடங்கியுள்ள உபேர் நிறுவனம்

இதுகுறித்து உபேர் ஈட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பவிக் ரத்தோட் அவர்கள் கூறியபோது, 'பெங்களூரில் உபேர் ஈட்ஸ் முதன்முதலாக தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

பெங்களூர் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் சமையல் திறமைகளுக்கு அப்பால் புதிய உணவுகளை தேடுவதை நாங்கள் உணர்ந்துள்ளதால், எங்கள் உணவகம் அவர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய உணவுகளை டெலிவரி செய்யும் நெட்வொர்க்கை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். "

நாட்டில் உள்ள மக்கள் ஒரே ஒரு பட்டனை அழுத்தி தங்களுக்கு தேவையான உணவுகளை வரவழைக்கும் அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த 'உபேர் ஈட்ஸ்.

குருகிராம் பகுதியை சேர்ந்தவர்கள் சிக்கன் ரோலையையும், மும்பையை சேர்ந்தவர்கல் வடபாவ் என்ற உணவையும் விரும்பி வேண்டி எங்களை அழைப்பது போலவே பெங்களூர் மக்கள் தோசைக்காக எங்களை அழைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த உபேர் ஈட்ஸ் என்று பவிக் ரத்தோட் கூறினார்.

எனவே பெங்களூர் மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவை ஒவ்வொரு நாளும் சுவைத்து உண்ண எங்களிடம் ஆர்டர் செய்யலாம். பெங்களூர் மக்களின் விருப்பத்திற்குரிய அடிகாஸ், மீல்ச், மதுரை இட்லி மற்றும் இந்தியா முழுவதும் விரும்பி உண்ணப்படும் உணவுகளை பரிஸ்டிகா, கிரிஸ்பி க்ரீம், சாய்பாண்ட் ஆகிய இடங்களில் இருந்து எங்களிடம் பெற்று கொள்ளலாம்

இயற்கை சீற்றம், கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க கிளம்பும் இஸ்ரோவைன் புதிய கண்.!இயற்கை சீற்றம், கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க கிளம்பும் இஸ்ரோவைன் புதிய கண்.!

உபேர் ஈட்ஸ் பெங்களூர் நிறுவனத்திற்கு வர்திகா பென்சல் என்பவர் பொதுமேலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் ரெஸ்டாரேண்ட் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரண்டு தரப்பினர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுவார் என்றும் பவிக் ரத்தோட் மேலும் கூறினார்.

தென்னிந்திய உணவு வகைகள் முதல் உலகின் முன்னணி உணவான சைனீஸ் உணவுகள் வரை எங்களிடம் கிடைக்கும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் உணவுத்தேவையை சரியான நெட்வோர்க், சரியான டெக்னாலஜி, சரியான ரெஸ்டாரெண்ட் பார்ட்னர்கள் மூலம் நாங்கள் பூர்த்தி செய்வோம்.

மேலும் பெங்களூரின் முக்கிய பகுதிகளான கோரமங்களா, HSR, பிடிஎம் லே அவுட் ஆகிய பகுதிகளில் மிக விரைவில் உபேர் ஈட்ஸ் கிளைகளை தொடங்கவுள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். என்று இந்நிறுவனத்தின் பொதுமேலாளர் வர்திகா பென்சால் கூறினார்.

உபேர் செயலியை போலவே உபேர் ஈட்ஸ் செயலியும் உணவுகளை ஆர்டர் செய்ய தனித்தன்மையுடன் செயல்படுகிறது. இந்த புதிய செயலி தேவையான நேரத்தில் சரியான உணவு கிடைக்க சரியான சேவையை செய்ய காத்திருக்கின்றது.

இந்த செயலியை வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் போன்களில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அல்லது ubereats.com என்ற இணையதளத்தின் மூலமும் நேரடியாக உணவுகளை ஆர்டர் செய்யலாம்

மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட உபேர் பிசினஸ் சர்வீஸ் மூலம் தினசரி பயணம், இரவு நேர பயணம், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குமான போக்குவரத்து மற்றும் இன்னும் பல புதிய பயன்பாடுகளை செயல்படுத்த இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Uber, the popular cab service provider has now launched "UberEATS" service in Bengaluru, partnering with over 300 restaurants.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X