கடலுக்கடியில் உபேர் சேவை.! ஒரு ட்ரிப்புக்கு எவ்வளவு தெரியுமா?

தற்பொழுது உபேர் நிறுவனம் ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மற்றும் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துடன் இனைந்து, உலகில் முதல் கடல் ஷேர்டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

|

உபேர் நிறுவனம் வாடகை டாக்ஸி சேவையை உலகம் முழு அறிமுகம் செய்து முன்னணியில் உள்ளது. தற்பொழுது உபேர் நிறுவனம் ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மற்றும் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துடன் இனைந்து, உலகில் முதல் கடல் ஷேர்டாக்ஸி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்குபர் (ScUber)

ஸ்குபர் (ScUber)

ஸ்குபர் (ScUber) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் டாக்ஸி சேவையை தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீப் (Great Barrier Reef) பகுதியில் துவங்கியுள்ளது.

பவளப்பாறை சுற்றுலா

பவளப்பாறை சுற்றுலா

உலகின் மிக அழகான பவளப்பாறை கொண்ட இந்த பகுதியைச் சுற்றுலாப்பயணிகள் அருகில் சென்று அனுபவிக்க இந்த சேவையை உபேர் அறிமுகம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்குபர் சேவையைப் பயனர்கள் தங்களின் உபேர் ஆப் செயலி மூலமே புக்கிங் செய்துகொள்ளலாம்.

20 அடி ஆழம் வரை சேவை

20 அடி ஆழம் வரை சேவை

இந்த ஸ்குபேர் டாக்ஸியில் இரண்டு நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும். காலுக்கடியில் சுமார் 20 அடிஆழம் வரை உள்ள சென்று பவளப்பாறைகள் மற்றும் ஆல்லக்கடல் வளங்களை ரசிக்க இந்த ஸ்குபேர் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவருக்கு ரூ.70,000 கட்டணம்

ஒருவருக்கு ரூ.70,000 கட்டணம்

ஸ்குபேர் டாக்ஸியில் பயணிக்க ஒரு நபருக்கு சுமார் 1500 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.70,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைக்கான கட்டணம் அதிகம் என நினைத்திருப்பீர்கள், ஆனால் இதற்குப் பின்னால் காரணம் உள்ளது. வசூலிக்கப்படும் பணத்தில் சுமார் 100,000 டாலர் பவளப்பாறைகளைப் பராமரிக்க அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்று உபேர் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
uber-launches-scuber-an-underwater-ride-hailing-service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X