உபெர் நிறுவனம் வியாபாரம் செய்வோருக்கென பிரத்தியேக சேவையை அறிமுகம் செய்துள்ளது

|

பிரபல கால்டேக்சி சேவை வழங்கும் செயலியான உபெர் "உபெர் ஃபார் பிஸ்னஸ்" என்ற பிரத்தியேக சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை தினசரி சவாரி, இரவு நேர சேவை, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.

வியாபாரத்திற்கான உபெர் சேவை அறிமுகம்ச உபெர் அதிரடி

உபெர் ஃபார் பிஸ்னஸ் சேவை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களின் வியாபார ரீதியிலான போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரங்களுக்கான சாலை மார்க்கமான அனைத்து வித போக்குவரத்து சேவைகளையும் வழங்கும் நோக்கில் புதிய உபெர் ஃபார் பிஸ்னஸ் தேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை வியாபார ரீதியிலான போக்குவரத்து இடையூறுகளை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சரி செய்துவிடுகிறது.

நிறுவனங்கள் தங்களது போக்குவரத்து தேவைகளை திட்டமிட்டு எங்களின் சேவையை திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடியும். என உபெர் ஃபார் பிஸ்னஸ் சேவையின் அர்ஜூன் நௌஹர் தெரிவித்தார்.

உபெர் ஃபார் பிஸ்னஸ் மிக எளிய டூல்களை கொண்டு எளிய முறையில் சேவைகளை வழங்குகிறது.

ஆட்டோமேடட்டெட் ப்ரோகிராம்கள்

ஆட்டோமேடட்டெட் ப்ரோகிராம்கள்

புதிய டூல்கள் மேனேஜர்களை போக்குவரத்துகளுக்கான ஆட்டோமேட்டெட் ப்ரோகிராம்களை பயணங்கள், வியாபார ரீதியிலான பயணம், விமான நிலையம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு வழங்குகிறது.

மேனேஜர்கள் இரவு நேர பயணங்களுக்கு ஏற்ப பயணங்களை செட் செய்ய முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஏற்ற பயண கட்டணங்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனித்தனி விதிமுறைகளையும், ஒவ்வொருவர் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை செட் செய்து கொள்ள முடியும்.

இத்துடன் பயண தூரம், கட்டணம், பயணம் துவங்கி, நிறைவடையும் இடத்தை திட்டமிட முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஏற்றவாரு சிறப்பான பயண திட்டங்களை தேர்வு செய்ய முடியும்.

இன்று முதல் ஜியோபோன் : கடைசி நிமிடத்தில் கிளம்பும் பீதிகளும், ஆச்சரியங்களும்.!இன்று முதல் ஜியோபோன் : கடைசி நிமிடத்தில் கிளம்பும் பீதிகளும், ஆச்சரியங்களும்.!

கஸ்டமைஸ்டு அக்சஸ்

கஸ்டமைஸ்டு அக்சஸ்

ஒவ்வொருவர் தேவைக்கு ஏற்ப உபெர் சேவைகளை அளவுக்கு ஏற்ப திட்டமிட முடியும். ஒவ்வொருவர் ஊழியருக்கும் அதிகபட்சம் ரூ.500 வரை தினசரி பயணத்திற்கு செலவிட உபெர் சென்ட்ரல் மூலம் பிரத்தியேக பயணங்களை பணிக்கு வருபவருக்கு வழங்க முடியும். நிறுவனத்தில் உள்ள தனித்தனி குழு, அளவு மற்றும் பயணம் செய்யும் இடம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியும்.

புதிய யூசர் இன்டர்பேஸ்

புதிய யூசர் இன்டர்பேஸ்

புதிய உபெர் ஃபார் பிஸ்னஸ் சேவையின் யூசர் இன்டர்ஃபேஸ் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீராக இயங்க வழி செய்யும் புதிய இன்டர்பேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கிறது. இத்துடன் உபெர் சென்ட்ரல் மிக எளிமையகவும், ஊழியர்களை வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்யும்.

வியாபாரத்திற்கான சேவை

புதிய வியாபாரத்திற்கான சேவை அதிகப்படியான சேமிப்பை வழங்குகிறது. இதனால் அட்மின் மற்றும் மேனேஜர்களுக்கு அதிகப்படியான சேமிப்பு கிடைக்கிறது.

இதனால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. வேலை நேரத்தில் ஏற்படும் கவலை மற்றும் களைப்பு மகிழ்ச்சியான பயணத்தில் களைப்பாற உதவியாக உபெர் சேவை வழி செய்யும்.

உபெர் ஃபார் பிஸ்னஸ் சேவையை பயன்படுத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பயண மேளாலர்கள், நிதி, மனித உரிமைகள் என ஒவ்வொரு துறையினரும் சிறப்பான வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். சேமிப்பில் துவங்கி, வியாபார வளர்ச்சி வரை இது பேருதவியாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Uber for Business aims to give organizations a more efficient way to manage their business travel and improve employees’ experience.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X