உபர் ஈட்ஸ்: உணவு விநியோகம் செய்ய புதிய டிரோன் சேவை அறிமுகம்!

|

உபர் நிறுவனம், உபர் ஈட்ஸ் என்ற உணவு விநியோக சேவையைச் செய்துவருகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும். தற்பொழுது உபர் ஈட்ஸ் நிறுவனம் உணவு விநியோகம் செய்வதற்கு டிரோன் சேவையைப் பயன்படுத்தியுள்ளது. முதல் முறையாக அதை அறிமுகமும் செய்துள்ளது.

சான் டியாகோ உணவு விநியோக டிரோன்கள்

சான் டியாகோ உணவு விநியோக டிரோன்கள்

புதிய உணவு விநியோக டிரோனை உபர் ஈட்ஸ் நிறுவனம் முதல் முறையாக கலிபோர்னியாவின் சான் டியாகோவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரோனில் 'ஆறு ரோட்டர்களுடன் கூடிய புதுமையான சுழலும் இறக்கைகள்' கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறு ரோட்டர்களுடன் கூடிய புதுமையான சுழலும் இறக்கை

ஆறு ரோட்டர்களுடன் கூடிய புதுமையான சுழலும் இறக்கை

இந்த ஆறு ரோட்டர்களுடன் கூடிய புதுமையான சுழலும் இறக்கைகள், டிரோனை செங்குத்தாகத் தரை இறக்கவும், செங்குத்தாக மேல் நோக்கி டேக் ஆஃப் செய்வதற்கும் எளிதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதுமையான இறக்கைகளால் அதிக அதிர்வுகள் இருக்காதென்றும், உணவு பொருட்கள் சிந்தி சேதமடையாது என்றும் உபர் ஈட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!

ஆகாய வழி உணவு விநியோகம்

ஆகாய வழி உணவு விநியோகம்

ஆறு ரோட்டர்களுடன் கூடிய இந்த இறக்கைகள் சுழன்று டிரோன்கள் வேகமாகப் பயணிக்கவும், அதன் வேகத்தையும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது உபர் ஈட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த உணவு விநியோக டிரோன்கள் இரண்டு நபர்களுக்கான உணவை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!பில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்!

உபர் டாக்ஸி விரைவில்

உபர் டாக்ஸி விரைவில்

அதேபோல் உபர் நிறுவனத்தின் பறக்கும் டிரோன் டாக்ஸி அடுத்த ஆண்டில் அதன் சோதனை ஓட்டத்தை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்தபின் 2023 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் பறக்கும் டாக்ஸி சேவையை உபர் துவங்கும் என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Uber Eats New Food Delivery Drones Launched In San Diego California : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X