உபர் டிரைவர்: தப்பா ட்ராப் லொகேஷன் சொன்ன 3 பயணிகளுக்குக் கத்தி குத்து.!

டாக்ஸி புக் செய்யும் பொது இயல்பாக நடக்கும் ஒரு சிறிய பிரச்சினை இன்று விபரீதம் ஆகிவிட்டது.

|

டாக்ஸி புக் செய்யும் பொது இயல்பாக நடக்கும் ஒரு சிறிய பிரச்சினை இன்று விபரீதம் ஆகிவிட்டது. டாக்ஸி புக் செய்யும் பொழுது பிக்-கப் லொகேஷன் மற்றும் ட்ராப் லொகேஷன் சரியாக கொடுப்பது முக்கியம் என்பது அந்நிறுவதின் விதிமுறைகளில் ஒன்று.

இருப்பினும் நம்மில் பலர் அவசரத்தில் சரியான இடத்தை மேப் இல் தேடி செலக்ட் செய்யச் சோம்பேறியாகி ட்ராப் லொகேஷன் அருகில் உள்ள ஒரு லொகேஷன்னை கிளிக் செய்து டாக்ஸி புக் செய்துவிடுவோம்.

லொகேஷன் செலக்ட்

லொகேஷன் செலக்ட்

சில டாக்ஸி டிரைவர்கள் இதைப் பெரிதும் பொறுப்படுத்துவதில்லை, ஆனால் இன்னும் சிலர் நீங்கள் கொடுத்த லொகேஷன் இதுதான் இறங்கிக்கொள்ளுங்கள் என்று கொஞ்சம் அன்பாகவும் அதிக கடுப்பாகவும் சொல்வார்கள். அதே போன்று அண்மையில் தவறுதலாக லொகேஷன்னை மாற்றி செலக்ட் செய்த பயணிக்கு உபர் டாக்ஸி டிரைவர் கத்தியால் பதில் சொல்லி இருக்கிறார்.

கத்தி குத்து

கத்தி குத்து

சண்டியாகோ நகரத்தில், போன சனிக்கிழமை இரவு 1.30-க்கு டாக்ஸியில் வீட்டுக்குச் சென்ற 3 பயணிகளிடம், உபர் டிரைவர் டாக்ஸியில் இருந்து இறங்கச் சொல்லி ஆரம்பித்த தகராறு கத்தி குத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உபர் டாக்ஸி டிரைவர் ஒரு இளம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவறான ட்ரோப் லொகேஷன்

தவறான ட்ரோப் லொகேஷன்

சரியான ட்ரோப் லொகேஷன் கொடுக்காததால் டாக்ஸி டிரைவர், அவர்களைக் கடுமையாக பேசத் துவங்கி இருக்கிறார். இந்தப் பேச்சு வாதம் சற்று நேரத்தில் கைகலப்புக்கு சென்றுவிட்டது, டாக்ஸியில் இருந்து இறங்க மறுத்த 3 பேரையும் தான் வைத்து இருந்த பெரிய கத்தியால் அந்த டாக்ஸி டிரைவர் குத்த துவங்கி விட்டார். இதில் ஒருவருக்குக் கையிலும், இன்னொருவருக்கு நெஞ்சிலும் மற்ற ஒருவருக்குக் கழுத்திலும் கத்தியால் குத்திவிட்டு அப்பெண் தப்பி சென்றுவிட்டார்.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பயணிகளையும் மருத்துவமனையில் அனுமதித்து, மூவருக்கும் தீவிர அவசர சிகிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிராபிக் சிக்னல் கேமரா

டிராபிக் சிக்னல் கேமரா

தப்பிச் சென்ற பெண் உபர் டிரைவர்ரை டிராபிக் சிக்னல் கேமராகள் மூலம் அடையாளம் கண்டு, நேற்று அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டாக்ஸி டிரைவருக்கு 30,000 டாலர் அபராதம் வழங்கப் பட்டு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டு சாண்டியாகோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பொது மக்கள் மற்றும் டாக்ஸி பயணிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Uber Driver Stabs Passengers During Argument Over Drop Location : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X