உபர் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.!

உபர் நிறுவனம் ஏற்கனவே உபர் ஏர் என்ற திட்டத்திடை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது.

By Sharath
|

உபர் நிறுவனம் ஏற்கனவே உபர் ஏர் என்ற திட்டத்திடை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன் படி 2023 இல் உபர் ஏர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபர் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.!

ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்குச் சென்றடைய நமக்கு எவ்வளவு நேரம் ஆகிறது? குறைந்தது இன்றைய சூழ்நிலைக்கு டிராபிக் இல் மட்டும் பல மணி நேரங்கள் வீணாய் போகும் நிலைமை தன இங்கு நிலவுகிறது. ஆனால் இனி அந்தக் கவலை வேண்டாம் ஒரு இடத்தில் இருந்து பக்கத்து நகரத்திற்குச் செல்ல இனி வெறும் 10 நிமிடங்கள் மட்டும் போதும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபர் எலவேட் ஆசியா

உபர் எலவேட் ஆசியா

இந்த உபர் ஏர் திட்டம் ஜப்பான், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தியாவில் போன்ற நாடுகளில் முதல் கட்டமாக துவங்கப்படும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபர் எலவேட் ஆசியா என்ற திட்டம் 2016ம் ஆண்டு பசிபிக் மாநாட்டில், உபரின் விமான சேவைகளுக்கான தலைவர் எரிக் ஏலிசன் தலைமையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.

2020 - 2023

2020 - 2023

மக்கள் நெரிசலினால் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நகரங்களில் மிகவும் அதிக அளவில் வாகன நெரிசல்கள் அதிகரித்து அனைவரது நேரமும் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையைச் சரி செய்வதற்கு மிகக் குறைந்த நேரத்தில் மக்கள் பயணத்திற்காக செலவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உபர் எலவேட் என்ற திட்டம் இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது. டோக்கியோ, தைப்பை, சியோல் மற்றும் சிட்னி ஆகிய இடங்களிலும் இந்தச் சேவை 2020 - 2023 க்குள் உறுதியாக அறிமுகம் செய்யப்படும். இந்திய மக்கள் இந்தச் சேவைகளின் மூலமாக நாளொன்றுக்கு 2 மணி நேரத்தினை சேமிக்க முடியும்.

உபரின் அடையாளம்

உபரின் அடையாளம்

உபரின் அடையாளமாக இனி கார்கள் மட்டும் தான் என்று சொல்ல முடியாது, இனி உபரின் அடையாளம் ஆன் அளவில் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனமாக மாறியுள்ளதாக உபர் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இந்த உபர் விமான சேவை முழுக்க முழுக்க பேட்டரி மூலம் இயங்கும் என்றும், இந்த விமானத்தின் சேவைகள் 15 கி.மீ முதல் 100 கி.மீ வரை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க இயலும் என்று தெரிவித்தனர்.

ஜப்பான் இல் உபர் ஏர்

ஜப்பான் இல் உபர் ஏர்

பிரத்தியேக உபர் ஏர் சேவைக்கான பல கட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாகவும். மேன்மேலும் பலதரப்பட்ட உபர் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் எரிக் ஏலிசன் கூறினார்.

உபர் ஏர் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க இருப்பதை முன்னிட்டு ஜப்பான் இல் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Uber AIR Here is everything you need to know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X