நரை வந்த பிறகே.! 2022இல் இந்தியர்கள் பயணம் செய்த மொத்த நேரம் எவ்வளவு தெரியுமா? Uber ஓபன்

|

பயணங்கள் என்பது ஒவ்வொரு மனித வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று. சாலையில் நின்று பார்த்தால் புரியும் வேகமாக செல்லும் கார்கள், நிரம்பி செல்லும் பேருந்துகள், பரபரப்பாக செல்லும் டூவீலர்கள் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தேடலை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருப்பார்கள். அதன்படி 2022 இல் Uber மூலம் இந்தியர்கள் பயணம் செய்த நேரம் மற்றும் அதிகம் பயணம் செய்தவர்கள் உள்ள நகரங்களின் விவரத்தை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Uber Go மற்றும் Uber Auto

Uber Go மற்றும் Uber Auto

2022 ஆம் ஆண்டில் அதிக உபர் பயணங்கள் செய்த நகரங்களின் பட்டியலில் டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை இருக்கிறது. பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணர்களின் மிகவும் பிரபலமான ஆஃப்ஷனாக Uber Go இருக்கிறது. Uber Auto மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சனிக்கிழமை தான் ஃபேமஸ்

சனிக்கிழமை தான் ஃபேமஸ்

பெரும்பாலான உபர் பயணங்கள் மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வார நாட்களில் சனிக்கிழமை என்பது அதிக புக்கிங் பெற்ற நாளாக இருக்கிறது.

2022 இல் அமோக வரவேற்பு

2022 இல் அமோக வரவேற்பு

அதேபோல் 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 11 பில்லியன் நிமிடங்கள் பயணம் செய்திருக்கின்றனர் என Uber அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட லாக் டவுனிற்கு பிறகான ஆண்டாக 2022 அமைந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு இந்தியர்கள் பெரிய அளவில் பயணிக்கத் தொடங்கி உள்ளனர் என உபெர் குறிப்பிட்டுள்ளது.

பயணர்கள் ஆப்ஷன்

பயணர்கள் ஆப்ஷன்

பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயனர்களின் மிகவும் பிரபலமான ஆப்ஷனாக Uber Go இருக்கிறது என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மிகவும் நெருக்கமாக அடுத்த இடத்தில் Uber Auto இருக்கிறது.

அதிகம் பயணம் செய்த இடங்கள்..

அதிகம் பயணம் செய்த இடங்கள்..

2022 ஆம் ஆண்டில் உபர் அதிகம் பயணம் செய்த நகரங்களாக டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை இருக்கிறது.

அதேபோல் அதிக வழித்தடங்கள் குறித்து பார்க்கையில், அதாவது அதிக பேர் எங்கிருந்து எங்கு வரை பயணம் செய்தார்கள் எனற விவரத்தையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மும்பையில் இருந்து புனே, மும்பை முதல் நாசிக், டெல்லி முதல் ஆக்ரோ, ஜெய்ப்பூர் முதல் சண்டிகர் மற்றும் லக்னோ முதல் கான்பூர் வரையிலான வழித்தடங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது.

123 நகரங்களில் சேவை

123 நகரங்களில் சேவை

இந்தியாவில் உபர் சேவை ஆனது 7 நகரங்களில் அதிகரிக்கப்பட்டு தற்போது 123 நகரங்களில் அதன் சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

Uber நிறுவனம் இந்த ஆண்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்தது. அது ஆட்டோ ரியர் சீட் பெல்ட் அலர்ட், RideCheck 3.0, SOS ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கருவித்தொகுப்பு உள்ளிட்டவைகள் ஆகும். Uber இன் 24X7 பாதுகாப்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது. ரைடர்ஸ் 88006-88666 என்ற எண்ணை தங்கள் தொலைபேசியிலிருந்து அழைக்கலாம். நேரடியாக உபர் பயன்பாட்டின் மூலமாகவும் அணுகலாம்.

உணவில் டாப் எது தெரியுமா?

உணவில் டாப் எது தெரியுமா?

அதேபோல் ஸ்விக்கி நிறுவனமும் 2022 இல் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகளை வெளியிட்டது. 2022 இல் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக சிக்கன் பிரியாணி இருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை காரணம், கடந்த ஏழு ஆண்டுகளாக பிரியாணி தான் முதலிடத்தில் இருக்கிறது.

பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது மசாலா தோசை, சிக்கன் ப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகள் இருக்கிறது.

வழக்கத்துக்கு மாறான உணவுகளில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்

வழக்கத்துக்கு மாறான உணவுகளில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு இந்திய பயனர்கள் கொரிய மற்றும் இத்தாலிய உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் இத்தாலியன் பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன், சுஷி, ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியா) ஆகிய உணவுகள் இடம்பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Uber 2022: Do you know the total time Indians traveled in 2022? Which city has the most bookings?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X