PF கணக்கு இருக்கா? இன்னும் 5 நாட்கள் தான் இருக்கும்.. இந்த வேலையை உடனே செய்து முடியுங்கள்.. இல்லனா?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பிஃஎப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது.
அதுவும் ஒரு முக்கியமான வேலையை அடுத்த சில நாட்களுக்குச் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் சில நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். குறிப்பாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டத்தின் பலன்களை எந்த தடையும் இல்லாமல் பெற இந்த வேலையை முடிப்பது மிகவும் அவசியம் ஆகும்.

அதாவது பிஃஎப் உறுப்பினர்கள் தங்கள் வங்கி கணக்கு மற்றும் உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) ஆதார் கார்டு (aadhaar card) உடன் இணைக்க வேண்டும். முன்பு இதற்கான காலக்கெடு ஜனவரி 15-ம் தேதி வரை இருந்தது. ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக இந்த வேலையை வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லையென்றால் உறுப்பினர்களுக்குப் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் உறுப்பினர்கள் இதை செய்யாவிட்டால் சில நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டத்தின் பலன்களை பெற, ஊழியர்கள் தங்கள் உலகளாவிய கணக்கு எண்ணை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பிஎஃப் உறுப்பினர்களுக்கு UAN எண் மிகவும் முக்கியம் ஆகும். இதை ஆக்டிவேட் செய்யாமல் இருந்தால், பிஎஃப் கணக்கு தொடர்பான பணிகள் பாதியில் நிறுத்தப்படலாம். அதுவும் UAN என்பது 12 இலக்க எண் ஆகும். ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினால் கூட இந்த UAN எண் அப்படியே இருக்கும்.
எனவே பணியாளர்கள் தங்கள் வேலையை வேறொரு இடத்திற்கு மாற்றும்போது அவர்கள் பிஃஎப் கணக்கை மாற்றலாம். இந்த செயல்முறையை தற்போது ஆன்லைனில் முடிக்கலாம். இதுதவிர ஊழியர்கள் தங்களின் EPFO தொடர்பான பல பணிகளை தற்போது ஆன்லைனில் முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி பிஎஃப் கணக்கை நிர்வகித்தல், அறிக்கையை சரிபார்ப்பது, அறிக்கையை பதிவிறக்கம் செய்வது, பணத்தை மாற்றுதல், பிஎஃப் முன்பனத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற பல வேலைகளை தற்போது ஆன்லைனிலேயே முடிக்கலாம்.

அதேசமயம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது, பிஎஃப் தொகையை (PF amount) உமாங் ஆப்ஸ் (UMANG Apps) மூலம் வித்ட்ரா செய்ய கூட அனுமதிக்கிறது. அதுவும் இந்தUMANG ஆப்ஸை பயன்படுத்தி எப்படி PF தொகையை வீட்டில் இருந்தபடியே வித்ட்ரா செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
அதாவது UMANG App செயலியை டவுன்லோட் செய்து அதில் EPFO விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து Employee Centric கிளிக் செய்து, Raise Claim கிளிக் செய்து உங்கள் EPF UAN நம்பரை உள்ளிடவேண்டும். அதன்பின்பு உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐ உள்ளிட்டு withdrawal முறையை தேர்வு செய்யுங்கள். Submit கிளிக் செய்து, உங்கள் PF தொகை கிளைம்ஸ் நம்பரை நோட் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான், குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் PF கணக்கில் இருக்கும் தொகை, நீங்கள் தேர்வு செய்த வித்ட்ரா முறைப்படி (EPF amount withdrawal) உங்களுக்கு கிடைத்துவிடும்.


Click it and Unblock the Notifications








