4 லட்சம் அபராதம் & 60 நாள் சிறை தண்டனை வாங்கித் தந்த வாட்ஸ் ஆப் காதலி.!

ஜோடிகளுக்கு மத்தியில் சண்டை, நகைச்சுவை மற்றும் செல்ல பெயர் வைத்து அழைப்பது போன்ற செயல்கள் மிகவும் பொதுவானவை.

|

ஜோடிகளுக்கு மத்தியில் சண்டை, நகைச்சுவை மற்றும் செல்ல பெயர் வைத்து அழைப்பது போன்ற செயல்கள் மிகவும் பொதுவானவை.

ஆனால் விளையாட்டாக முட்டாள் என்று அழைத்த காதலனுக்கு 60 நாள் சிறை தண்டனை மற்றும் 4 லட்சம் அபராதம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 சைபர் கிரைம் குற்றம்

சைபர் கிரைம் குற்றம்

ஆனால் சிலநேரங்களில் இயல்பான செயல்கள் கூட நம்மைச் சிக்கலில் சிக்க வைத்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அரபு நாட்டில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யூஏஈ) நாடுகளில் சமூகவலைத்தளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகளில் அவதூறாகப் பதிவிடுதல் சைபர் கிரைம் குற்றமாக கருதப்படுகிறது.

"ஹாப்லா"

அரேபிய பெண் ஒருவர் அவரின் காதலுடன் வாட்ஸ் ஆப் இல் உரையாடும் பொழுது, காதலன் விளையாட்டாக "ஹாப்லா" (habla) என்று திட்டிவிட்டார். ஹாப்லா என்பதற்கு அரேபிய மொழியில் அறிவற்ற முட்டாள் என்பது பொருளாகும்.

காதலியை அவமதிக்க நினைக்கவில்லை

காதலியை அவமதிக்க நினைக்கவில்லை

நகைச்சுவையான முறையில் தான் ஹாப்லா என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும், தனது காதலியை அவமதிக்கும் எண்ணத்தில் அப்படிச் சொல்லவில்லை என்றும் நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் காதலன் தெரிவித்துள்ளார்.

4 லட்சம் அபராதம்

4 லட்சம் அபராதம்

இருப்பினும் அவரின் காதலி அப்படி நினைக்காத காரணத்தினால், அவர் கொடுத்த புகாரின் பெயரில் தனது காதலனுக்கு 60 நாட்கள் சிறை தண்டனையும் 4 லட்சம் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது. பாவம் ஒரு மெசேஜ்க்கு 4 லட்சம் அபராதம் மற்றும் 60 நாள் சிறை தண்டனை. இனிமேல் மெசேஜ் செய்யும் முன் கவனித்து அனுப்புங்கள்.

ரூ.2 கோடி வரை அபராதம்

ரூ.2 கோடி வரை அபராதம்

அரேபிய சட்டப்படி, சமூக ஊடகங்களில் அவமதிப்பிற்கு உள்ளாகும் தகவல் மற்றும் மற்றவரைத் தாக்கும் விதத்தில் இருக்கும் அணைத்துப் பதிவுகளும் சைபர் கிரைம் ஆகா கருதப்படுகிறது. இதுவரை இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அதிகப்படியாக ரூ. 2 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
UAE man calls fiancee idiot on WhatsApp fined Rs 4L : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X