அமெரிக்காவின் தொலைந்துபோன அணு நீர்மூழ்கிகப்பல்கள் : த்ரெஷ்சர் & ஸ்கார்பியன்
ஆழ்கடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, "சிறு சிரமத்தை அனுபவிக்கிறோம்.
நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் த்ரெஷ்சர், மாசசூசெட்ஸ்-ன் பாஸ்டன் நகரத்தின் கிழக்கே 220 மைல்கள் (350 கிமீ) தொலைவில் ஆழ்கடல் பரிசோதனையை நடத்தியது. அந்த நேரத்தில் உலகிலேயே மிக வேகமான அமைதியான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான த்ரெஷ்சர், மிக மேம்பட்ட ஆயுத அமைப்புகளைக் கொண்டிருந்தது.

சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க கட்டமைக்கப்பட்ட த்ரெஷ்சர்,தொலைதூரத்தில் உள்ள மற்ற நீர்மூழ்கிகப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்ட புதிய சோனார் அமைப்பையும் கொண்டிருந்தது. அமெரிக்க கடற்படையின் புதிய நீர்மூழ்கிகப்பல் பாதுகாப்பு ஏவுகணையான SUBROC ம் இதில் இணைக்கப்பட்டிருந்தது. அறிவும். UUM-44 SUBROC ஏவுகணையானது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும். இந்த ஏவுகணை 5 கிலோ அணு ஆயுதத்தை சுமந்துசெல்லும் திறன்கொண்டது.

ஜூலை 9, 1960 அன்று
ஜூலை 9, 1960 அன்று நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள போர்ட்ஸ்மவுத் நாவல் ஷிப்யார்டில் இருந்து தனது பயணத்தை துவங்கிய த்ரெஷ்ர், 25 த்ரெஷ்சர் கிளாஸ் கப்பல்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. மேற்கு அட்லாண்டிக் மற்றும் கரீபியன் ஆகியவற்றில் பலகட்ட கடல் சோதனை ஓட்டங்கள் ன நடத்திய பிறகு,மற்றொரு பரிசோதனைக்காக 1962 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று போர்ட்மவுத் திருப்பிய த்ரெஷ்சர் ஏப்ரல் 8, 1963 வரை துறைமுகத்திலேயே இருந்தது.

129 குழு உறுப்பினர்
ஏப்ரல் 9, 1963 அன்று, லெப்டினென்ட் தளபதி ஜான் வெஸ்லி ஹார்வியின் தலைமையில் 129 குழு உறுப்பினர் ஆகியோருடன் காலை 8 மணிக்கு துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி மீட்புகப்பலான் ஸ்கைலார்க் உடன் புறப்பட்டது த்ரெஷ்சர். பலமுறை நீருக்கடியில் பயணித்து பரிசோதனைகளை மேற்கொண்டு ஸ்கைலார்க் உடன் தொடர்பிலேயே இருந்த த்ரெஷ்சர், அடுத்த நாள், ஏப்ரல் 10 ம் தேதி அன்று ஆழமான நீர்மூழ்கி சோதனைகள் தொடங்கியது.

வெடித்த சத்தம்
ஆழ்கடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, "சிறு சிரமத்தை அனுபவிக்கிறோம். மேல்நோக்கிய நேர்மறை கோணத்தில் வெளியேற முயற்சிக்கிறோம் " என்ற அழைப்பை ஸ்கைலார்க் பெற்றது. 900N என்பதுடன் பரிசோதனை ஆழத்தை தாண்டுகிறது என்ற செய்தியை பெற்ற நிலையில், ஸ்கைல்க் உயர் ஆற்றல் மற்றும் குறைந்த அதிர்வெண் சத்தம் ஸ்கைலார்க்கால் கண்டறியப்பட்டது. இந்த சத்தம் கடல்நீரின் அழுத்ததால் கப்பல் வெடித்த சத்தம்!

எஞ்சியுள்ள பாகங்கள்
யு.எஸ் கடற்படை விரைவாக கடற்படை கப்பலான மிசார்-ஐ பயன்படுத்தி தேடுதலை துவங்கியது. 100க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய த்ரெஷ்சரின் எஞ்சியுள்ள பாகங்கள் 8400அடி ஆழத்தில் கிடைத்தது.

சரியாக 20 நாட்களுக்குப் பிறகு
1960 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று, த்ரெஷ்சர் தனது பயணித்தை துவங்கி சரியாக 20 நாட்களுக்குப் பிறகு, கனெக்டிகட்-ன் க்ரோடன்ல் அறிமுகப்படுத்தப்பட்டது யுஎஸ்எஸ் ஸ்கார்பியன். 1962 ஆம் ஆண்டில் அதன் நிரந்தர துறைமுகமாக வர்ஜினியாவின் நோர்போல்க் இருந்தது. 1960 களின் ஆரம்பத்தில், ஸ்கார்பியான் இந்த அமெரிக்க 6 வது கடற்படை மற்றும் நேட்டோவுடன் பல கடற்படை பயிற்சிகளில் கலந்து கொண்டது.

த்ரெஷ்சர்
ஸ்பெயினின் ரோடாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து ஜான் சி. கலௌன் மற்றும் 99 வீரர்களுடன் மே 16,1968 புறப்பட்டது ஸ்கார்பியன். அட்லாண்டிக் பகுதியில் சோலியஸ் கடற்படை நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பட்ட இது, த்ரெஷ்சர் மூழ்கிய அதே கோளாறால் ஆழ்கடலில் கடல் அழுத்தத்தினால் வெடித்தது.


Click it and Unblock the Notifications