இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  |

  கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண வர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இந்தியாவிலேயே சேமித்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் வேண்டும் போது எந்த தடைகளும் இல்லாமல் அந்த பண வர்த்தனைகளின் உண்மைத் தன்மைகளை தங்களால் ஆய்வு செய்ய முடியும் என்று ஒரு விதியை டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள் உடனே செயல்படுத்த வலியுறுத்தினார்கள். அதற்காக சுமார் 6 மாத காலம் அவகாசமும் கொடுத்தார்கள்.

  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  ஆனால் இதற்கு அமெரிக்காவின் விசா, மாஸ்டர் கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனங்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தன. அப்படி இந்தியாவில் தகவல்களை சேமித்து பாதுகாக்க பல மில்லியன் டாலர்கள் செலவு ஏற்படுவதோடு டேட்டாக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகத்திடம் இந்த விதியை நிபந்தனை இன்றி தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள்.

  ஆனால் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் குரூப் மற்றும் சைனாவின் அலி பாபாவை பின்னணியாக கொண்ட பே-டிம் என்கிற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் விதியை ஏற்றுக் கொண்டு அதை அவர்கள் நிர்ணயித்த கால கெடுக்குள் செயல்படுத்த ஒப்புதல் கொடுத்து விட்டது. மேலும் அதற்கான கூட்டத்தில் பே-டிஎம் இந்த விதி அவசியம் தான் அது இந்திய தேசத்தின் நலன் சார்ந்தது என்று இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கி பேசியது. இது இந்த விதியை எதிர்க்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பே-டிஎம் நிறுவனத்தின் மீது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  ஏற்கனவே இந்திய டிஜிட்டர் பரிவர்த்தனை சந்தையில் தங்களின் பெரும் போட்டியாளராக இருக்கும் பே-டிஎம் நிறுவனம் இந்த விதி சார்ந்து தங்களோடு ஒத்துழைக்காமல், கலந்தாலோசிக்காமல் செயல்படுவது தவறு மேலும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் தங்களின் ஆதிக்கத்தை மேலும் செலுத்தும் வகையில் இந்த விதியை ஏற்றுக் கொண்டதாக அமெரிக்க நிறுவனங்கள் பே-டிஎம் நிறுவனத்தை குற்றம் சாட்டி வருகின்றன.

  உலக டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் நமது மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்குள் நடந்த இந்த விதி தொடர்பான தகவல் பரிமாற்றங்களை ராய்டர் நிறுவனம் வெளியுலகிற்கு தெரிவித்த பிறகு இந்த செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

  இந்தியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் எஸ்.சி. கார்க், அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் பே-டிஎம் நிறுவனம் இந்திய நலன் சார்ந்து பேசி அமெரிக்க நிறுவனங்களையும் இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள விவாதித்ததை உறுதி செய்தார். மேலும் பே-டிஎன் நிறுவனம் டிஜிட்டல் தரவுகளை இந்தியாவில் சேமிக்கும் விதிகளை எதிர்த்து இந்திய தேசிய நலனுக்கு எதிராக விவாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதையும் அவர் தெரிவித்ததாக அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  ஆனால் முன்னுக்கு பின் முரணாக இந்த விஷயத்தில் லாபி செய்வது போல் மே மாதத்தில் பே-டிஎம் நிறுவனம் இந்திய பேமென்ட்ஸ் கவுன்சில் (Payments council of india) க்கு அனுப்பிய தனிப்பட்ட மெயிலில் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் சேமிப்பு விதியை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியே கசிந்து அது மேலும் விவகாரமாகி உள்ளது.

  இந்த விஷயத்தில் பே-டிஎம் நிறுவனம் மூடிய கதவுகளுக்கு பின்னால் லாபி செய்வதாக அமெரிக்க டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனங்கள் அந்த மெயிலை அடிப்படையாக வைத்து பே-டிஎம் நிறுவனத்தின் மேல் நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன.

  ஆனால் பே-டிஎம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சோனியா தவான் இந்திய அரசு மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு இடையேன கூட்டத்தில் நடந்தவைகளை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை என்று சொன்னதோடு, இந்தியாவின் தேசிய நலன் சார்ந்து தங்கள் நிறுவனம் டிஜிட்டர் பரிவர்த்தனை தகவல்களை இந்தியாவில் தான் சேமித்து பாதுகாக்க வேண்டும் என்கிற விதியை அமல்படுத்துவதில் தங்கள் நிறுவனத்திற்கு எந்த தயக்கமும் இல்லை. அதை செயல்படுத்த உறுதியோடு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இரண்டு இந்தியர்கள் நடத்தும் பண பரிவர்த்தனைகளை அந்நிய நாடுகளில் சேமிப்பதோ, பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியமோ இல்லை என்பதையும் அவர் உறுதியாக தெளிவு படுத்தினார்.

  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  மேலும் இந்திய பேமென்ட்ஸ் கவுன்சில் சேர்மன் நவின் சூர்யா, சுபாய் ராய் இன்டர்நெட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் சுபோ ராய் அலுவல சார்ந்த தகவல் தொடர்புகள் வெளியே கசிவது நிறுவனங்களுக்கு நல்லது அல்ல. மேலும் அது தொடர்பான கருத்து தெரிவிப்பதும் சரியாக இருக்காது என்று அத் தகவல் தொடர்பான கருத்துக்களை கூற மறுத்து உள்ளனர்.

  டிஜிட்டல் வர்த்தகமும் லாபிச் சண்டைகளும்

  இப்படி பே-டிஎம் மற்றும் அமெரிக்க டிஜிட்டல் நிறுவனங்களுக்கு இடையே போட்டி, பனிப்போர்கள் ஒரு புறம் நடந்தாலும் இந்திய டிஜிட்டல் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது என்று பாஸ்டன் கல்சல்டிங் குரூப் மற்றும் கூகிள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன். இந்திய டிஜிட்டல் வர்த்தகம் 2020ம் ஆண்டிற்குள் பத்து மடங்காக பெருகி சுமார் 500 பில்லியனை தாண்டும் என்று அந் நிறுவனங்கள் கணித்து உள்ளன.

  பே-டிஎம் நிறுவனம் மொபைல் வேலட் ஆப் மூலம் இந்திய வர்த்தகர்களிடம் பரிவர்த்தனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டு விசா, மாஸ்டர் கார்டுகளின் ஆளுமையை ஆட்டம் காட்டி விட்டு இந்திய டிஜிட்டர் வர்த்தக சந்தையின் தன்னுடைய ஆதிக்கத்தை மிக ஆழமாக நிலை நாட்டி வருவதையும் வெளிப்படையாக கவனிக்க முடிகிறது.

  கவுன்டர் பாயின்ட் ஆராய்ச்சி மையத்தின் இயக்குர் நீல் ஷா, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் வேண்டுகளோடுக்கு இணங்காமல் நமது தேச நலன் கருதி நமது வர்த்தக விதிமுறைகளை இன்னும் கடுமையானதாக்க வேண்டும். இங்கே பே-டிஎம் உட்பட எந்த அந்நிய நிறுவனமும் தங்களின் வர்த்தக சுயநலன் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இயங்குகின்றன. இந்திய தேச நலனை பற்றி அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் தான் கவலைப் பட்டு விதிகளை கடுமையாக்க முயல வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

  கடந்த நவம்பர் 2016ல் இந்திய ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கையை பிரதர் நரேந்திர மோடி அறிவித்த சமயத்தில் தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியாவில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது மாதம் சுமார் 2 பில்லியன் டாலர் வர்த்தகத்தை தொட்டு முன்பை விட சுமார் 5 மடங்கு டிஜிட்டல் வர்த்தகம் அதிகரித்து உள்ளது. 2016ம் ஆண்டி மே மாதத்தில் மொத்தம் 52 மில்லியன் டாலருக்கு அதாவது 964 மில்லியன் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் வர்த்தகம் நடந்து இருந்தது. அது நவம்பருக்கு முந்தையை மாதங்களை விட இரண்டு மடங்கு கூடுதலான டிஜிட்டல் வர்த்தகம் ஆகும்.

  இந்திய டிஜிட்டல் வர்த்தகத்தின் வளர்ச்சியை பார்த்து பிரமித்து போன ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கூட பரிவர்த்தனை சேவைகளை வேகமாக ஆரம்பித்து செயல்படுத்த ஆரம்பித்து விட்டன. குறிப்பான அமேசான் நிறுவனம் பொருட்களை விற்பதோடு, மொபைல் ரீசார்ஜ், பில் பேமென்ட்கள், டிராவல் புக்கிங் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை ஆரம்பித்து விட்டதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆளத் துடிக்கும் அந்நிய நிறுவனங்கள்.!

  ஒன்றை மட்டும் மிகத் புரிந்து கொள்ள முடிகிறது இந்திய அனைத்து துறையில் வளர்ச்சி கண்டு கலாமின் கனவை நினைவாக்க வல்லரசாக வளருமோ வளராதோ இந்திய சந்தையை முற்றுகை இட்டு அந்நிய தேசமும், அதன் சார்ந்த நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சியை முன்னிருத்தி ஒரு மறைமுக பொருளாதாரப் போரை நிகழ்த்துகிறார்கள் என்பது மட்டுமே நிதர்சனமாக உணர முடிகிறது. இங்கே ஆட்சியாளர்கள் தங்களையும் ஆட்சியையும் மட்டுமே காப்பாற்றி கொள்ள போராடும் போது நம் தேசத்தையும் நலனையுமா பாதுகாக்க போகிறார்கள்.

  English summary
  U S firms face off with Indian rival in lobbying against data storage rules : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more