Home
News

ஆஹா ஸ்பீக்கர்னா இதான் Speaker.. ஒலியும் இருக்கு.. ஒளியும் இருக்கு.. டபுள் சவுண்ட் உடன் மினி தியேட்டர் அனுபவம்.

U&i பிராண்ட் வித்தியாசமான ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு பெயர் போன ஒரு பிரபலமான பிராண்டாக திகழ்கிறது. இந்த பிராண்ட் தற்போது இந்தியாவில் புதிதாக U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் டிவைஸ் ஒரே நேரத்தில் ஒலியையும் தருகிறது மற்றும் ஒளியையும் தருகிறது. ஆம், இந்த ஸ்பீக்கர் ஒலி என்னும் சவுண்டை தருவதோடு, RGB விளக்குடன் ஜொலிக்கும் ஒளி என்னும் வெளிச்சத்தையும் தருகிறது. இது பார்ட்டி செய்ய சிறந்த ஸ்பீக்கராக அமைகிறது.

U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker) சாதனம் லைட் வெயிட் உடன், கையில் எளிமையாக தூக்கி செல்ல உதவும் வகையிலான போர்ட்டபிள் ஸ்பீக்கர் கருவியாக வெளிவந்துள்ளது. இது 5 வாட்ஸ் பவர் உடன் 80dB கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை வழங்கும் ஒரு பட்ஜெட் விலை ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா ஸ்பீக்கர்னா இதான் Speaker.. ஒலியும் இருக்கு.. ஒளியும் இருக்கு..

U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker):

இந்த U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker) சாதனம் 90Hz முதல் 20KHz வரையிலான பிரிக்கவென்சி ரேஞ் வரை கவர் செய்கிறது. இந்த ஸ்பீக்கர் 1200mAh பேட்டரி உடன் 6 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இயங்கும் பிளேபேக் டைம் நேரத்தை வழங்குகிறது. இதில் குவிக் சார்ஜிங் அம்சமும் உள்ளது.

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரின் வடிவமைப்பில் உள்ள மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உங்கள் ஸ்மார்ட்போனை இந்த ஸ்பீக்கர் உடன் இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் மொபைல் ஸ்டாண்ட் இடத்தையும் வழங்குகிறது. இது போனை ஸ்பீக்கர் உடன் இணைத்து வீடியோ பார்க்க அனுமதிக்கிறது. ஒரு மினி தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கரில் FM ரேடியோ அம்சமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker) சாதனம் கஸ்டமைஸ் செய்துகொள்ள அனுமதிக்கும் RGB லைட் விளக்குகளை கொண்டுள்ளது. இதில் USB, AUX, TWS போன்ற அம்சங்களும் உள்ளன. இதன் கனெக்ஷன் ரேஞ் 10 மீட்டர் தூரம் வரை மிக துல்லியமாக இருக்குமென்று அறிவித்துள்ளது. சரி, இதன் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாமா?

U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker Price):

U&i பிரில்லியண்ட் சீரிஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (U&i Brilliant Series Wireless Bluetooth Speaker) சாதனம் இந்தியாவில் ரூ. 2499 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது U&i அவுட்லெட் கடைகள் மற்றும் ரிடைலர் கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. Uandiworld.com இணையதளம் வழியாகவும் விரைவில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
U&i Brilliant Series wireless Bluetooth speaker price Rs 2499 available in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X