Home
News

நூதன முறையில் போலி ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி 25 லட்சம் திருடிய இரு மாணவர்கள்.!

பெங்களூரு கொத்தனூர் போலீசார் பெங்களூரு தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு உகாண்டாவை சேர்ந்த மாணவர்களைக் கைது செய்துள்ளது.

By Sharath

பெங்களூரு கொத்தனூர் போலீசார் பெங்களூரு தனியார் கல்லூரியில் படிக்கும் இரண்டு உகாண்டாவை சேர்ந்த மாணவர்களைக் கைது செய்துள்ளது.

ஹெக்டே நகர் சர்க்கிளில் ரோந்து பணியில் சுற்றிவந்த பொது தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகே சந்தேகப்படும் படியாகச் சுற்றி திரிந்த 2 வெளிநாட்டவரைச் சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரித்தனர்.

நூதன முறையில்  பணத்தை திருடும் கும்பல்

நூதன முறையில் பணத்தை திருடும் கும்பல்

போலீசார் விசாரணைக்கு இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ஏ.டி.எம்-களில் இருக்கும் பணத்தை திருடும் கும்பலென்று தெரிய வந்துள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் கருவிகளை பொருத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து பொதுமக்களின் பணத்தை நூதன முறையில் திருடிவந்தது தெரியவந்தது.

ஏ.டி.எம் எந்திரங்களில்

ஏ.டி.எம் எந்திரங்களில் "ஸ்கீம்மர்"

உகாண்டாவை சேர்ந்த பாபாலண்டா அமுனான்(25) மற்றும் ஆன்ஜிடோ அம்ரோஸ்(22) ஆகிய இருவரை ஏ.டி.எம். மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து ஏ.டி.எம் எந்திரங்களில் "ஸ்கீம்மர்" எனும் கருவியை பயன்படுத்தி ஏ.டி.எம் கார்டுகளின் தகவல்களைச் சேகரித்து, சிறிய அளவிலான ரகசிய கேமராவை ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ள பொத்தான்களின் மேற்புறம் பொருத்தி பயனர்களின் பாஸ்வர்ட்களையம் சேகரித்து போலி ஏ.டி.எம் அட்டைகள் தயாரித்து எளிதாக பணத்தை திருடிவந்துள்ளது தெரியவந்திருக்கிறது .

கைது

கைது

கைது செய்யபட்ட இருவரின் வீட்டில் இருந்து 2 லேப்டாப், 2 போலி ஏ.டி.எம் கார்டு தயாரிக்கும் எந்திரம், 4 ஸ்கீம்மர் கருவி, சிறிய கேமராக்கள், 4 மோடம்கள், 9 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.25 லட்சம் நூதன முறையில் மோசடி

ரூ.25 லட்சம் நூதன முறையில் மோசடி

இந்த இருவரும் சேர்ந்து ரூ.25 லட்சம் வரை நூதன முறையில் மோசடி செய்து பல ஏ.டி.எம்-களில் பணத்தை திருடியுள்ளனர். இந்தக் கும்பலில் ஈடுபட்ட இவர்களது நண்பர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார், அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுவரை பெங்களூர் இல் 20க்கும் அதிகமான ஏ.டி.எம் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அது அனைத்தும் அவர்களின் கைவரிசை தான் என்று தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Two Ugandan students held for ATM skimming : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X