அறை வெப்பநிலையில் மீக்கடத்தல்! கண்டறிந்த பெங்களூர் ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளர்கள்..

இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவெனில், பெரும்பாலான முறைகள் பொருட்களை சூப்பர்கூலிங் செய்வதையும் உள்ளடக்கியது . அதனால் தான் இந்தியாவில் நடைபெற்று வரும் சமீபத்திய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.

|

1911 ஆம் ஆண்டில் சூப்பர்கன்டெக்டிவிடி எனப்படும் மீக்கடத்தலை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இது இயற்பியலாளர்களிடையே ஒரு பைத்தியம் பிடித்தது போன்ற தேடலுக்கு உட்பட்டுள்ளது. இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவெனில், பெரும்பாலான முறைகள் பொருட்களை சூப்பர்கூலிங் செய்வதையும் உள்ளடக்கியது . அதனால் தான் இந்தியாவில் நடைபெற்று வரும் சமீபத்திய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு

பெங்களூர் இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் சயின்ஸ்-ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் இருவர் சமர்பித்த மறுஆய்விற்கான முன்மொழிதலில், அறைவெப்பநிலையில் ஒரு மீக்கடத்தியை உருவாக்குவது எப்படி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர். இவர்களது கண்டுபிடிப்பு மிகப்பெரியது என்றாலும், இது அறிவியல் சமூகத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவர்களது ஆய்வு கட்டுரையில் சில தரவுகள் போதுமானதாக இல்லாததால் மற்ற ஆய்வகங்களில் இந்த சோதனைகள் பிரதிபலிக்க முடியவில்லை. தற்போது அந்த இரண்டு விஞ்ஞானிகளான அன்சூ பாண்டே மற்றும் தேவ் குமார் தபா, தங்களது ஆய்வுக்கட்டுரையில் திருத்தம் செய்தனர்.

வெள்ளி நானோதுகள்கள்

வெள்ளி நானோதுகள்கள்

கடந்த ஆண்டு தங்கள் கூற்றுக்களை சுற்றியுள்ள சந்தேகத்திற்கு பதிலளிப்பதற்காக, இருவரும் தங்களது ஆய்வுக்கட்டுரையை புதுப்பித்துள்ளதுடன், அந்த ஆய்வு கட்டுரையை சயின்டிபிக் மேகசீனிலும் வெளியிட்டுள்ளனர். இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் தங்கத்தில் உட்பொதிக்கப்பட்ட வெள்ளி நானோதுகள்கள் அடங்கிய துகள்கள் மற்றும் மைக்ரோஸ்கோபிக் பிலிம்களில் மீக்கடத்தல் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவே மிக அற்புதமான சாதனை என்றே தோன்றுகிறது. ஏனெனில் வெள்ளி மற்றும் தங்கம் இரண்டும் தனித்தனியாக மீக்கடத்தல் திறனை வெளிப்படுத்துவது இல்லை.

பாண்டே மற்றும் தபா

பாண்டே மற்றும் தபா

இவற்றிற்கெல்லாம் மேலாக, பாண்டே மற்றும் தபா இருவரும் இந்த வழிமுறையை பயன்படுத்தி சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை பயன்படுத்தியே இந்த மீக்கடத்தல் திறனை அடைகின்றனர். இரு ஆராய்ச்சியாளர்களும் 125 மாதிரிகளை தங்கள் முறையில் பரிசோதித்தபோது, அவற்றில் 10 மாதிரிகளில் மின்தடை குறைந்தது, அதாவது மீக்கடத்தல் திறனை அடைந்தது என்பதை இதன் மூலம் நிரூபிக்கின்றனர். அவை அனைத்தும் மீதமுள்ள மாதிரிகள் தோல்வியடைந்ததற்கான என்னவெனில், மாதிரிகளை தயார் செய்து அவற்றை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் போது ஏற்பட்ட ஆக்ஸிஜன் வெளிப்பாடு ஆகும்.

உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.

 ராமன் விளைவு

ராமன் விளைவு

"இது மட்டும் சரியானதாக இருந்தால், ராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்தியாவில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இது," என்கிறார் ஐஐஎஸ்சி இயற்பியல் துறையுடன் தொடர்புடைய முன்னணி சிதைவுப் பொருள் இயற்பியலாளர் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் . "அவர்கள் செய்த இந்ந பொருள் நம்பமுடியாதது.இதில் சிறு கோள வடிவ தங்கத்தின் உள்ளே 10-20 குறு கோள வடிவ வெள்ளி துகள்கள் உள்ளன. மின்தடையில் வலுவான வீழ்ச்சியை அவர்களது கண்டுபிடிப்பு காட்டுகிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.!பாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.!

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

அவர்களது தரவுகளின் அடிப்படையில், அப்பொருள் 13 டிகிரி-செல்சியஸ்-ல் மீக்கடத்தல் தன்மையை அடைகிறது. ஆனால் முந்தைய முறைகளில் பூஜ்ய வெப்பநிலைக்கு கீழே தான் பொருட்கள் மீக்கடத்தல் தன்மையை அடையும்.

மற்ற விஞ்ஞானிகளிடையே இன்னும் சில சந்தேகங்கள் இருந்தாலும், இந்த ஆய்வுக்கட்டுரையானது மறுபரிசீலனை செயல்முறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டால், இது இந்தியாவின் பெரும் சாதனை இருக்கும் மற்றும் சமீபத்திய தசாப்தங்களில் இயற்பியல் உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செல்லூர் ராஜூவையே மிஞ்சிய பொறியாளர் தெர்மாகோலில் வீடு கட்டி அசத்தல்.!செல்லூர் ராஜூவையே மிஞ்சிய பொறியாளர் தெர்மாகோலில் வீடு கட்டி அசத்தல்.!

Best Mobiles in India

English summary
Two Researchers Discovered Superconductivity At Room Temperature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X