Home
News

மலிவு விலை ஸ்மார்ட்போன், இலவச இண்டர்நெட் : அசத்தும் இந்திய நிறுவனம்.!!

By Meganathan

மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பெயர் பெற்ற இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவிண்ட் குறைந்த விலையில் இரு ஸ்மார்ட்போன் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் படி பாக்கெட்சர்ஃபர் 2G4X மற்றும் பாக்கெட்சர்ஃபர் 3G4Z மாடல் கருவிகளை முறையே ரூ.2,499 மற்றும் ரூ.3,999 விலைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

டேட்டாவிண்ட் நிறுவனத்தின் இரு கருவிகளும் விரைவில் இந்தியாவின் அனைத்து வர்த்தகர்களிடமும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்.

இலவசம்

இலவசம்

டேட்டாவிண்ட் பாக்கெட்சர்ஃபர் 2G4X மற்றும் பாக்கெட்சர்ஃபர் 3G4Z மாடல் கருவிகளை வாங்குவோர் ரிலையன்ஸ் மற்றும் டெலிநார் திம் கார்டுகளை கொண்டு ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்தலாம்.

ஆடியோ / வீடியோ

ஆடியோ / வீடியோ

இலவச இண்டர்நெட் கொண்டு ஆடியோ / வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கம் போன்றவைகளை மேற்கொள்ள முடியாது. இருந்தும் பயனர்கள் எல்லையில்லா ப்ரவுஸிங் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

பாக்கெட்சர்ஃபர் 2G4X கருவியில் 3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள்-கோர் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

பாக்கெட்சர்ஃபர் 2G4X கருவியின் மெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு விஜிஏ ப்ரைமரி / செல்பீ கேமரா மற்றும் 2ஜி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

பாக்கெட்சர்ஃபர் 3G4Z

பாக்கெட்சர்ஃபர் 3G4Z

பாக்கெட்சர்ஃபர் 3G4Z கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள்-கோர் பிராசஸர் 512 எம்பி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

பாக்கெட்சர்ஃபர் 3G4Z கருவியில் 4ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும் விஜிஏ முன்பக்க கேமராவும் 2ஜி, 3ஜி, டூயல் சிம் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Two low cost smartphones with free internet access launched in India. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X