4ஜி செப்க்ட்ரம் ஒதுக்கீடு: 2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.!

நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்

|

நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இன்னும் சில காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதிலும் உள்ள 2 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் பலதரப்பட்ட ஊழியர் சங்கங்கள் இணைந்து 3 நாள் தொடர் வேலை நிறுத்தத்தை அறிவித்து நடத்தி வருகின்றது. திங்கள்கிழமையான நேற்று இந்த வேலை நிறுத்த போராட்டம் துவங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறுமென்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு

4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு

ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நீண்ட கால தாமதத்தை எதிர்த்தும், இன்னும் சில காரணங்களை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெறுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். நல்ல பதிலை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அலட்சியத்தை கண்டித்து

மத்திய அரசு அலட்சியத்தை கண்டித்து

4ஜி ஸ்பெக்ட்ரத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த கோரி பல முறை முயற்சி செய்தும் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருவதை கண்டித்து, நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து இன்னும் பல போராட்டங்கள் நிகழுமென்றும் பி.எஸ்.என்.எல் சேவை வழங்குனர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்

தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்

மத்திய அரசு, தற்காலிகமாக தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், இதனால் கடுமையான நிதி இறுக்கதிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது என்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர், டெபாசிஷ் சௌதிரி, தெரிவித்துள்ளார்.

 நிலுவை

நிலுவை

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஊதியங்கள் 2017 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2018 ஆம் ஆண்டில் இரண்டு முறை ஊதிய திருத்தும் விரைவில் அமல்படுத்தப்படுமென்று கூறி அரசாங்கம் உறுதி அளித்திருந்தது, ஆனலும் இன்று வரை நிலுவையில் தான் உள்ளது என்று அனைத்து யூனியன் மற்றும் பிஎஸ்என்எல் அசோசியேசன் அமைப்பாளர் கன்னியாபன் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Two lakh BSNL employees begin three-day strike : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X