Home
News

1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்.. இவ்வளவு ஆஃபர்கள்..! Jio-வின் சூப்பர் திட்டங்கள்..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 2ஜிபி-க்கும் அதிகமான டேட்டாவுடன் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

Jio: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்!

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்:Jio Rs 2879 prepaid திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்: Jio Rs 2999 prepaid திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Jio: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்!

ஆனால் ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதலாக 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் வைத்துள்ள அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.739 திட்டம்: ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.739 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 126ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. மேலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

ஜியோ ரூ.789 திட்டம்: ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.789 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. மேலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

Jio: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்!

ஜியோ ரூ.749 திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த ஜியோ ரூ.749 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Two Jio prepaid plans offer one year validity with more than 2GB data per day : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X