நெட்பிளிக்ஸ் சந்தா.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 2 Jio திட்டங்கள்..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். சமீபத்தில் கூட ரூ.2025 திட்டத்தை அறிமுகம் செய்து அதிக சலுகைகள் வழங்கியது ஜியோ நிறுவனம். அதேபோல் இந்த ஆண்டும் பல அசத்தலான திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் என்னென்ன மற்றும் எத்தனை நாட்கள் வேலிடிட்டி வழங்கும் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தல்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன.
அதாவது நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். எனவே இந்த ஆண்டு வெளியாகும் புதிய படங்களை மிக எளிமையாக நெட்பிளிக்ஸ் உதவியுடன் பார்க்க முடியும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ திட்டம்.
ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. பின்பு ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.


Click it and Unblock the Notifications