கார் பார்க்கிங்கில் லேப்டாபோடு அமர்ந்த இரண்டு சிறுமிகள்: அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியில் உள்ள உணவகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இரண்டு சிறுமிகள் லேப்டாப், புத்தகங்களோடு அமர்ந்திருந்துள்ளனர். இதுகுறித்த விளக்க புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

லேப்டாப் மற்றும் பாடப்புத்தத்தோடு
இந்தநிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள உணவகத்தின் கார் பார்க்கிங்கில் இரண்டு சிறுமிகள் லேப்டாப் மற்றும் பாடப்புத்தத்தோடு அமர்ந்து வைஃபை பயன்படுத்தி பாடம் படித்து வந்தனர். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாவில் வெளியீடு
இந்த புகைப்படமானது இன்ஸ்டாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறுமிகளுக்கு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் அளவு நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர் கூறிய கருத்துகள் குறித்து பார்க்கலாம்.

கல்வி கற்கும் புகைப்படம்
சிறுமிகள் கல்வி கற்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட நபர் கூறியதவாது, தனது தாய் இந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பியதாகவும், இந்த சிறுமிகள் பாடம் கற்பதற்காக உணவகத்தின் இலவச வைபையை இரண்டு சிறுமிகள் பயன்படுத்தியுள்ளனர். தற்போது நம்மில் ஏராளமானோருக்கு இணையம் எளிதாக கிடைக்கிறது. ஆனால் இதுபோல் பல மாணவர்களுக்கு இலவச வைஃபை கிடைக்கவேண்டிய நேரம் இது. அனைவரும் உதவ முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சமூகவலைதளங்களில் வைரல்
இவரது பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சிறுமியின் வீட்டில் இலவச இணைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சிறுமிகளின் கல்வி உதவிக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications